தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Janhvi Kapoor: காந்தி, அம்பேத்கர், சாதி பற்றி பேசிய ஜான்வி கபூர்.. அதிர்ந்த பாலிவுட் திரையுலகம்!

Janhvi Kapoor: காந்தி, அம்பேத்கர், சாதி பற்றி பேசிய ஜான்வி கபூர்.. அதிர்ந்த பாலிவுட் திரையுலகம்!

Marimuthu M HT Tamil
May 25, 2024 05:44 PM IST

Janhvi Kapoor: ஒரு புதிய நேர்காணலில், ஜான்வி கபூர் மகாத்மா காந்தி பற்றியும், அம்பேத்கர் பற்றியும் பேசியுள்ளார்.

Janhvi Kapoor: காந்தி, அம்பேத்கர், சாதி பற்றி பேசிய ஜான்வி கபூர்.. அதிர்ந்த பாலிவுட் திரையுலகம்!
Janhvi Kapoor: காந்தி, அம்பேத்கர், சாதி பற்றி பேசிய ஜான்வி கபூர்.. அதிர்ந்த பாலிவுட் திரையுலகம்! (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவின் மராத்தி மொழியில் சாதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட பிரபலமான படம், சாய்ரட். அந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான ‘தடக்’ என்னும் இந்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர். இப்படத்தில் நடித்தமைக்காக பல பிரிவினரால் ஜான்வி விமர்சிக்கப்பட்டார்.  

ஜென் இஸட் நடிகையான ஜான்வி கபூர், சாதிவாதம் மற்றும் மகாத்மா காந்தி மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் இடையேயான கருத்தியல் விவாதம் குறித்து பேசியது வைரல் ஆகியுள்ளது. 

ஜான்வி என்ன சொன்னார்

ஜான்வி நேர்காணலில் தனக்கு வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக கூறியபோது, நேர்காணல் செய்தவர் அவரிடம் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திற்கு காலப் பயணத்தை விரும்புகிறீர்கள் என்று கேட்டார். 

இந்த கேள்விக்கு நேர்மையாக பதிலளிப்பதாக ஜான்வி கூறினார். ஆனால் அவரது கருத்துக்கள் பார்வையாளர்களுடன் சரியாக அமராது என்பதால் இது குறித்து அவரை விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் இந்திய அரசியலமைப்பின் நிறுவனர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோருடைய கருத்துகள் குறித்து, சாதி குறித்த அவர்களது கருத்துகளைப் பற்றி விவாதிப்பதைக் காண விரும்புகிறேன் என்று ஜான்வி கபூர் கூறினார்.

நேர்காணல் செய்தவர் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டார். அப்போது பேசிய ஜான்வி கபூர், "அம்பேத்கர் தனது நிலைப்பாடு என்ன என்பதை ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாகவும் கண்டிப்பாகவும் வைத்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், காந்தி சாதி குறித்து பேசியபோது, அவரது பார்வை வளர்ந்து கொண்டே இருந்தது என்று நான் நினைக்கிறேன். நம் சமூகத்தில் உள்ள இந்த சாதியப் பிரச்னை, ஒரு மூன்றாவது நபரிடமிருந்து  பெறப்பட்ட தகவல்களை வைத்து வாழ்வது, பேசுவது என்பது இயல்பில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது’’ என்றார்.

நேர்காணல் செய்தவர் ஜான்வியிடம் அவரது பள்ளியில் சாதி பற்றி ஏதேனும் உரையாடல் இருந்ததா என்று விசாரித்தபோது, அவர் இல்லை என்று மறுத்துவிட்டார். மேலும், ’’என் வீட்டில் கூட சாதி பற்றிய உரையாடல் இல்லை" என்றார். 

இணையத்தில் நடந்த எதிர்வினைகள்:

ஜான்வியின் நிலைப்பாட்டிற்கு பலரும் எதிர்வினையாற்றினர்.ஒரு எக்ஸ் பயனர் ஜான்வியின் கருத்துக்களின் கிளிப்பைப் பகிர்ந்து, "ஒரு முக்கிய பாலிவுட் நடிகையிடமிருந்து இதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அம்பேத்கர், காந்தி மற்றும் சாதி குறித்து ஜான்வி கபூர் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார். 

 அவர்களில் இன்னொருவர், "மிகவும் ஈர்க்கப்பட்டேன்!" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "இதுபோன்ற புரிதல் மற்றும் ஆய்வினைப் பார்ப்பது அரிதானது’’ என்று கருத்து தெரிவித்தார். 

"ஆமா, ஆச்சர்யமா இருக்கு.. அதுவும் புதிய தலைமுறை பாலிவுட் நடிகையிடமிருந்து... அவள் என்ன பேசுகிறாள் என்று அவளுக்குத் தெரியும்.. அவள் மனதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள், "என்று ஒருவர் கருத்துரைத்துள்ளார். 

ஜான்வி கபூர் அடுத்து மிஸ்டர் மற்றும் மிஸஸ் மஹி, தேவரா: பகுதி 1, உலஜ், சன்னி சன்ஸ்கரி கி துளசி குமாரி மற்றும் சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்கிறார். 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்