தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  'ஒருவர் நம்பும் வேட்பாளரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்' - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி

'ஒருவர் நம்பும் வேட்பாளரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்' - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி

Karthikeyan S HT Tamil
Apr 26, 2024 09:57 AM IST

Lok Sabha Election 2024: நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரில் வாக்களித்தார். ஒருவரின் நம்பிக்கையின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி, கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா -8, உத்தர பிரதேசம் - 8, மத்திய பிரதேசம் - 6,பீகார்-5, அஸ்ஸாம் - 5, மேற்குவங்கம் -3, சத்தீஸ்கர் - 3, ஜம்மு-காஷ்மீர் -1, திரிபுரா-1, மணிப்பூர் -1 என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகா மக்களவை தேர்தல் 2024

கர்நாடக மாநிலத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 247 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

முதல்கட்ட தேர்தலில் ஹாசன், தென்கன்னடம், ஹாசன், தும்கூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு என மொத்தம் 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், பாஜக 11 தொகுதிகளிலும், மஜதா 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று காலை பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், "ஒருவர் நம்பும் வேட்பாளரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "எனது வாக்கு எனது உரிமைக்காக, என்னை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் இருப்பார்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான எனது வாக்கானது என்னுடைய உரிமையை நிலை நாட்டுகிறது. நீங்கள் நம்பும் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், கடந்த 10 ஆண்டுகளில் நாம் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலின் காரணமாக, நான் நம்பும் வேட்பாளருக்கும், அவர்கள் கொண்டு வந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் மாற்றத்திற்கும் நான் வாக்களித்துள்ளேன்." என்று கூறியுள்ளார்.

ஸ்டார் வேட்பாளர்கள்

கர்நாடகாவை பொறுத்தவரையில் நட்சத்திர வேட்பாளராக மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி இன்றைய தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேலும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சிவமொக்கா தொகுதியில் களம் காண்கிறார். மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலேஜே பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மைசூரு மன்னர் குடும்பத்து பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த நரசிம்மராஜ உடையார் மைசூரு தொகுதில் களமிறங்கி உள்ளார். துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் தம்பி டி.கே.சுரேஷ் பெங்களூரு ஊரகம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்