தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம்..அதிரடி உத்தரவு போட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம்..அதிரடி உத்தரவு போட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Karthikeyan S HT Tamil
Sep 19, 2023 10:37 AM IST

Shawarma Death Issue: ஷவர்மா, க்ரில் சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாநிலம் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

ஹோட்டல்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
ஹோட்டல்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஹோட்டலில் வாங்கிவந்த உணவுகளை வீட்டில் சாப்பிட்டபின் சிறிது நேரத்தில் கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

கலையரசியுடன் உணவு சாப்பிட்ட தாய் சுஜாதா அவரது மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே, அதே ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உமா அந்த ஹோட்டலுக்குச் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், உணவகங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறதா? என கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்