தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mark Statement : 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உடனே இதை செய்யுங்கள்!

Mark Statement : 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உடனே இதை செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 12, 2023 11:20 AM IST

Mark Statement : 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கு இன்று கடைசி நாள் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்கால மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அதன்படி 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுக்காக கொடுத்த பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி உட்பட தனிப்பட்ட தகவல்களில் திருத்தங்கள், பிழைகள் இருந்தால் அதனை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் திருத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களில் திருத்தம் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு அதில் திருத்தம் செய்யப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழில் புகைப்படம், பிறந்ததேதி என எதாவது திருத்தங்கள் இருந்தால் நாளைக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட உள்ளது. இதனை மாற்ற இயலாது எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தாண்டு கடுமையான கோடை வெப்பம் நிலவியது. பொதுவாக மே மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். ஆனால் மே முடிந்து தற்போது வரை வெயில் சுட்டெரிக்கிறது. எனவே மாணவர்கள் நலன்கருதி பள்ளி திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால், முதலில் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் குறையவேயில்லை. எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இந்த விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டு இருந்தது. கோடை விடுமுறை முடிந்து இன்று (12ம் தேதி, திங்கட்கிழமை) தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறையை கொண்டாடிய மாணவர்கள் பள்ளி செல்லும் உற்சாக மனநிலைக்கு வந்துள்ளனர். தங்களுக்கு தேவையான புத்தப்பைகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டனர். இன்று பள்ளி நண்பர்களை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் புறப்பட்டுச்சென்றனர்.

தொடர்ந்து 14ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்