தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Elephant: யானைக்கு கும்கி உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை

Elephant: யானைக்கு கும்கி உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 17, 2023 09:27 AM IST

காரமடை பகுதியில் சுற்றி திரிந்த மக்னா யானைக்கு கும்கி யானை உதவியுடன் மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கும்கி யானை சின்னத்தம்பி
கும்கி யானை சின்னத்தம்பி

ட்ரெண்டிங் செய்திகள்

மேட்டுப்பாளையம் காரமடை வனச்சரகம், காரமடை பிரிவு, கோபனாரி காப்புக்காடு. வெள்ளியங்காடு மேற்கு சுற்று வட்டார பகுதியில் கடந்த 14ம் தேதி காலை சுமார் 5.00 மணியளவில் காட்டு யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி பட்டா நிலத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் சுமார் 15 வயது மதிக்க தக்க மக்னா யானை ஒன்று பட்டா நிலத்தில் இருப்பது தெரியவந்து, இதையடுத்து காரமடை பிரிவு வானவர் தலைமையில் தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு யானையை அருகில் உள்ள காப்பு காட்டிற்குள் திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அன்று மாலை யானை அதே பட்டா நிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவல் வெளியானது. இதையடுத்து வனச்சரகர் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தது. இதில் யானையின் உடல் நிலை குன்றிருப்பதும், உணவு உட்கொள்ளாமல், தண்ணீர் மட்டும் அருந்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் அடிப்படையில் வனக் கால்நடை அலுவலர், யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்தார். வனக் கால்நடை அலுவலர் ஆய்வு செய்ததில் வாய் பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் பல நாட்கள் உணவு அருத்தாமல், உடல் மெலிந்து காணப்படுகிறது என தெரிய வந்தது. இதையடுத்து, பழங்களின் மூலம் மருந்து வழங்கப்பட்டுள்ளது. யானை ஆதிமாதையனுர் பகுதிகளில் உலாவி வந்தது. இந்த யானையை தனி குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

விளைநிலத்தில் சுற்றி திரியும் மக்னா யானை
விளைநிலத்தில் சுற்றி திரியும் மக்னா யானை

இந்நிலையில் நேற்று கள இயக்குநர் மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மருத்துவ குழு மற்றும் வனப் பணியாளர்கள் குழு களத்தணிக்கையில் ஈடுபட்டு, சிகிச்சைக்காக யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக ஆனைமலை புலிகள் காப்பக டாப்ஸ்லிப்பில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து முதல் கட்டமாக சின்னத்தம்பி உதவியுடன் யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது. யானையை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து முடுக்கி  விடப்பட்டது. இதையடுதது பிடிபட்ட யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் யானைக்கு நாக்கின் நடு பகுதியில் வெட்டு காயம் இருப்பது தெரியவந்துள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்