Today Gold Rate : சூப்பரப்பு.. தங்கம் வாங்க சரியான நேரம் வந்துவிட்டது.. ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வந்தது. அந்த வகையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பது குறித்து பார்க்கலாம். ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Today Gold Rate : சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 1) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சவரன் ரூ.53,680-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.