Thambi Ramaiah: ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் எப்போது? - தம்பி ராமையா கொடுத்த அப்டேட்
ஐஸ்வர்யா - உமாபதி திருமணம் குறித்த தகவலை தம்பி ராமையா தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் ஒன்றாக நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக நடிகர்களின் வாரிசு தற்போது ஒன்று சேர உள்ளனர்.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இதனையடுத்து இது குறித்து தம்பி ராமையா சமீபத்தில் அளித்த பேட்டியில், ”நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக என் மகன் உமாபதி கலந்து கொண்டார். அப்போது உமாபதியும், ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டு நன்கு பழகி வந்தார்கள். பின்பு அவர்களின் நட்பு காதலாக மாறியது.
எங்கள் இரு குடும்பத்தினரும் சமீபத்தில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் முதல் முறையாக சந்தித்தோம். அதை தொடர முடிவு செய்துள்ளோம்.
விரைவில் திருமண தேதியை முடிவு செய்து, உமாபதியின் பிறந்தநாளான நவம்பர் 8 ஆம் தேதி அறிவிப்போம். 2024 பிப்ரவரியில் (தை மாசம்) திருமணம் நடக்கலாம் “ என்றார்.
ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் நடிகர் விஷாலுடன் சேர்ந்து பட்டத்தை யானை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் இயக்கிய சொல்லி விடவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அதே போல் உமாபதி, அதாகப்பட்டது மஹா ஜனங்களே, தண்ணி வண்டி, மணியார் குடும்பம், திருமணம் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ராஜாக்கிளி என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் உமாபதி. சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்