தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Moscow Terror Attack: 60 Killed, Islamic States Claims Responsibility

Moscow terror attack: ஐயோ! பயங்கரவாதிகள் தாக்குதலில் ரஷ்யாவில் 60 அப்பாவிகள் பலி! இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்பு!

Kathiravan V HT Tamil
Mar 23, 2024 08:21 AM IST

”ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்”

மார்ச் 22, 2024 வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் எரியும் கட்டிடத்தின் அருகே காத்திருக்கும் ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்டவரின் உடலை மருத்துவர்கள் கொண்டு செல்கின்றனர்.
மார்ச் 22, 2024 வெள்ளிக்கிழமை, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் எரியும் கட்டிடத்தின் அருகே காத்திருக்கும் ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்டவரின் உடலை மருத்துவர்கள் கொண்டு செல்கின்றனர். (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வெற்றி பெற்ற சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் கச்சேரி அரங்குக்கும் தீ வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மாஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துக்க நேரத்தில் ரஷ்ய அரசாங்கத்துடனும் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது" என்று எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பயங்கரவாதக் குழுவான ’இஸ்லாமிக் ஸ்டேட்’ என்ற அமைப்பு இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. சமூக ஊடகங்களில் தொடர்புடைய சேனல்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில். தாக்குதல் நடத்தியவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. தீயினால் கச்சேரி அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்படி நடந்தது தாக்குதல்? என்ன செய்கிறது ரஷ்யா?K

  1. மாஸ்கோவின் மேற்கு பகுதியில் 6200 பேர் தங்கக்கூடிய இசை அரங்கமான குரோகஸ் சிட்டி ஹால் மீது தாக்குதல் நடத்தப்பட்ட உடன் சில நிமிடங்களில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதிடினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  2. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ரஷ்ய ராக் இசைக்குழு பிக்னிக் நிகழ்ச்சியைக் காண மண்டபத்தில் இருந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் வெடிமருந்துகளை வீசிய பின்னர் வெடித்த தீயில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று சில ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
  3. தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி இதுவரை அதிகம் தெரியவில்லை. ரஷ்ய ஊடகங்கள் மற்றும் டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. 
  4. கச்சேரி அரங்கில் காவலர்களிடம் துப்பாக்கிகள் இல்லை. ரஷ்ய சிறப்புப் படைகள் வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக சில ரஷ்ய செய்தி அமைப்புகள் கூறி உள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்திய பல வாகனங்களை அதிகாரிகள் தேடி வந்தனர்.
  5. மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள க்ராஸ்னோகோர்ஸ்கில் "கிறிஸ்தவர்களின்" ஒரு பெரிய கூட்டத்தைத் தாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று காயப்படுத்தியதாக இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது இருப்பினும் அறிக்கையின் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
  6. கடந்த சில வாரங்களில் மார்ச் 7 அன்று, ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு நிறுவனம், மாஸ்கோவில் உள்ள ஜெப ஆலயத்தின் மீது இஸ்லாமிய அரசு பிரிவு நடத்திய தாக்குதலை முறியடித்ததாகக் கூறியது. சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யாவின் கொந்தளிப்பான காகசஸ் பகுதியில் உள்ள இங்குஷெட்டியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஐஎஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
  7. உக்ரைனின் தலையீடு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து இரக்கமின்றி கொல்லப்படுவார்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்தார். இதற்கிடையில், உக்ரைன் தனது தலையீட்டை மறுத்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகரான மைக்கைலோ பொடோலியாக், தனது நாடு "எப்போதும் பயங்கரவாத முறைகளைப் பயன்படுத்தவில்லை" என கூறி உள்ளார்.
  8. இந்த மாத தொடக்கத்தில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம், இசை அரங்குகள் உட்பட பெரிய கூட்டங்களை குறிவைக்கும் தீவிரவாதிகளின் "உடனடி" திட்டங்களைக் கருத்தில் கொண்டு நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களைக் கேட்டுக் கொண்டது. அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "இந்த பயங்கரமான தாக்குதல் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது" என்று மறுத்துள்ளார்.
  9. செய்தி அறிக்கைகளின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், பின்னர் ஒரு கைக்குண்டு மற்றும் தீக்குண்டுகளை வீற்சி உள்ளனர். அதிகாரிகள் பயங்கரவாத கோணத்தை ஆராய்ந்து வருகின்றனர் மற்றும் புதின் தொடர்ந்து தாக்குதல் தொடர்பான விசாரணை தகவல்களை பெற்று வருகிறார். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, இது ஒரு "இரத்தம் தோய்ந்த பயங்கரவாத தாக்குதல்" என்று கூறி உள்ளார். "ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இந்த மோசமான குற்றத்தை கண்டிக்க வேண்டும்," என்று அவர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.
  10. அமெரிக்க ஜனாதிபதி பைடன் இந்த தாக்குதலை "பயங்கரமானது" என்று கூறியதுடன், உக்ரைனில் நடந்த மோதலுடன் எந்த தொடர்பும் இருப்பதற்கான உடனடி அறிகுறி எதுவும் இல்லை என்று கூறி உள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்