தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul: ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மாணவி தற்கொலை - காரணம் என்ன?

Dindigul: ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து மாணவி தற்கொலை - காரணம் என்ன?

Karthikeyan S HT Tamil
May 03, 2023 10:50 AM IST

தண்டவாளத்தில் தலை வைத்து சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

யஷ்வந்தினி நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலில் வந்தார். வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தில், ரயில் நின்றபோது யஷ்வந்தினி ரயிலை விட்டு திடீரென்று இறங்கி உள்ளார்.

பின்னர் யாரும் கவனிக்காத நேரத்தில் நடைமேடையில் இருந்து வேகமாக இறங்கி ரயில் பெட்டிகளுக்கு கீழே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றபோது, ரயில் சக்கரத்தில் சிக்கி யஷ்வந்தினி தலை துண்டாகி இறந்தார்.

இதை பார்த்து நடைமேடையில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்துபோய் நின்றனர். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் விரைந்து வந்து இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், மாணவி யஷ்வந்தினிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சட்டக்கல்லூரி மாணவி, ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை தீர்வல்ல..

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்