தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Jobs At Health Department And Central Security Force Find Jobs Here

சுகாதார பணியாளர் மற்றும் டிரைவர் வேலை : எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Jan 28, 2023 11:54 AM IST

Job opportunity : சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படையில் டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்கள் உள்ளே உள்ளன.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

10ம் வகுப்பு கல்வி தகுதியுடன் கனரக வாகனங்களை ஒட்டுவதற்கான உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கனரக மோட்டார் வாகனம், போக்குவரத்து வாகனம் அல்லது இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

22-2-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 27 வயதுக்குட் பட்டிருக்க வேண்டும். அரசு விதி முறைகளின்படி வயது தளர்வு உண்டு, எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படை யில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2023, விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். 

சுகாதார நிலையங்களில் வேலை 

மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய நவக்குழுமம் (NHM) மூலமாக பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நகர சுகாதார மேலாளர் அல்லது சுகாதார செவிலியர் பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளது. அதற்கு மாதச்சம்பளம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். எம்எஸ் நர்சிங் முடித்து சமூக சுகாதாரம், குழந்தை நலம், உள்ளிட்ட பொது சுகாதார பிரிவுகளில் போதிய அனுபவம் இருக்க வேண்டும். பிஎஸ்சி நர்சிங் முடித்து பொது சுகாதார துறையில் 3 ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் இருக்க வேண்டும். 

மருந்தாளுனருக்கு 9 காலியிடங்கள் உள்ளது. அதற்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதற்கு Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy முடித்திருக்க வேண்டும். தமிழக பார்மசி கவுன்சிலில் பதிவு செய்வதுடன், அதை முறையாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். 

ஆய்வக உதவியாளர் பணிக்கு 12 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்கும் நபர் கட்டாயம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் பதிவுபெற்ற ஏதேனும் ஒரு நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ. 13 ஆயிரம் வழங்கப்படும். கண் பார்வை நன்றாக இருக்க வேண்டும். வெளியில் சென்று வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு 8 இடங்கள் காலியாக உள்ளது. 8,500 ரூபாய் மாதச்சம்பளம் வழங்கப்படும். கண்பார்வை நன்றாக தெரியவேண்டும். 

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் (Resume) இவ்வலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, அறிக்கை வெளியிடப்பட்ட பத்து (06.02.2023) தினங்களில், மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

கல்வித் தகுதி சான்றிதழ் (10th, 12th மற்றும் பட்டப்படிப்பு) 

மதிப்பெண் பட்டியல்,

முன் அனுபவச் சான்றிதழ், 

விதவை சான்றிதழ்,

இருப்பிட சான்றிதழ்,

ஆகியவற்றுடன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : மாநகர் நல அலுவலர், 3வது மாடி, பொது சுகாதாரப் பிரிவு, அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை மாநகராட்சி, தல்லாகுளம், மதுரை - 625 002. 

கூடுதல் தகவல்களுக்கு chomducorp@gmail.com என்ற இணையதளத்தை பார்க்க வேண்டும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்