Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை - டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை - டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை - டாப் 10 நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Sep 05, 2024 07:00 PM IST

Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கம், மின்வாரிய ஊழியருக்கு அரிவாள் வெட்டு, சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் உள்பட மாலைப் பொழுதிற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை - டாப் 10 நியூஸ்!

ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கின் ரூ.55.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஹோட்டல், சொகுசு பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 வகை கார்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஊத்தங்கரை அருகே தந்தை, தங்கை வெட்டி படுகொலை

ஊத்தங்கரை அருகே சொத்து பிரச்னையில் தந்தை, தங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொட்டுகாரன்பட்டி கிராமத்தை வரதன், அவரது மகள் வானவள்ளி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். வரதனின் மகனும், வானவள்ளியின் சகோதரனுமான லவகிருஷ்ணன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு ஊராட்சியில், நிதி இழப்பு செய்தும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய பாஜக ஊராட்சி மன்ற தலைவர் பி.வெங்கடேசன் என்பவரை பதவிலிருந்து நீக்கி திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவு.

மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தினத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கக்கடலில் காற்றத்தாழ்வுப் பகுதி உருவானது

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நிர்மலா சீதாராமன் பேச்சு

சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவல்களை பகிர வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்துதான் முதலில் ஆலோசிப்போம். வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்த திட்டங்களைக் கூட பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கடைசியாகத்தான் ஆலோசிக்கிறோம் எனவும் கூறினார்.

ரூ.2,000 கோடிக்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்

சிகாகோவில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி அளவிலான திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ட்ரில்லியண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவ உள்ளது. நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை. சென்னையில் தயாரிப்பு, வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேச்சுவார்த்தை.

சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியருக்கு அரிவாள் வெட்டு

சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் செல்வராஜ்(47) என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பணியில் இருந்து வீடு திரும்பிய போது நவாச்சாலையில் செல்வராஜை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர்.

உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்

உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து இதுவரை 249 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.

ஆசிரியர் கைது

பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ்ப் பாடத்தில் புறநானூறு செய்யுள் பாடலை தவறாக எழுதிய பிளஸ் 2 மாணவனை, அடித்த புகாரில் தமிழ் ஆசிரியரான சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். கன்னத்திலும், தேர்வெழுதும் அட்டையால் முதுகிலும் ஆசிரியர் அடித்ததாக மாணவர் தரப்பு அளித்த புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி எஸ்.பி.வருண்குமாரை அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு செய்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.