பெண் குளிப்பதை படம் எடுத்து மிரட்டிய இளைஞர்: பொத்தி தூக்கிய சைபர் கிரைம் போலீஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பெண் குளிப்பதை படம் எடுத்து மிரட்டிய இளைஞர்: பொத்தி தூக்கிய சைபர் கிரைம் போலீஸ்

பெண் குளிப்பதை படம் எடுத்து மிரட்டிய இளைஞர்: பொத்தி தூக்கிய சைபர் கிரைம் போலீஸ்

Karthikeyan S HT Tamil
Mar 24, 2022 07:30 PM IST

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

<p>கோப்பு படம்</p>
<p>கோப்பு படம்</p>

தொடர்ந்து இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இளம் பெண்ணின் வீட்டிற்கு பார்த்திபன் அடிக்கடி சென்று வந்துள்ளாா். அங்கு 49 வயதுடைய இளம் பெண்ணின் தாயாரிடம் பார்த்திபன் பேசி பழகி வந்துள்ளார். இதற்கிடையில் பார்திபனின் நடவடிக்கை பிடிக்காததால் இளம்பெண் அவருடன் நட்பை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளம் பெண்ணிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தனது நட்பை முறித்து கொண்ட தோழியை சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்த பார்த்திபன், ரூ. 50 ஆயிரம் பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணிடம், நீ பணம் தரவில்லை என்றால் உனது தாயார் குளிக்கும் வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது. அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற அந்த இளம்பெண் தனது தாயாருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக அந்த பெண்ணின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் அளித்த புகார் மனுவில், நாகர்கோவில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த எனது மகளுடன், கீரின்ஸ் தெருவை பார்த்திபன் நண்பராக பழகி வந்தார். அதன்பேரில், பார்த்திபன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில், நான் வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கூறி ரூ 50 ஆயிரம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் பார்த்திபனை கைது செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பார்த்திபனையும் போலீசார் சிறையில் அடைந்தனர்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.