Home Decors Idea : குறைவான பட்ஜெட்டில் உங்கள் பால்கனியை அலங்கரிக்க வேண்டுமா? இதோ இவற்றை முயற்சியுங்கள்!-home decors idea want to decorate your balcony on a budget try these here - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : குறைவான பட்ஜெட்டில் உங்கள் பால்கனியை அலங்கரிக்க வேண்டுமா? இதோ இவற்றை முயற்சியுங்கள்!

Home Decors Idea : குறைவான பட்ஜெட்டில் உங்கள் பால்கனியை அலங்கரிக்க வேண்டுமா? இதோ இவற்றை முயற்சியுங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 02, 2024 02:50 PM IST

Home Decors Idea : குறைவான பட்ஜெட்டில் உங்கள் பால்கனியை அலங்கரிக்க வேண்டுமா? இதோ இவற்றை முயற்சி செய்யுங்கள். உங்கள் வீடு சிறக்கும்.

Home Decors Idea : குறைவான பட்ஜெட்டில் உங்கள் பால்கனியை அலங்கரிக்க வேண்டுமா? இதோ இவற்றை முயற்சியுங்கள்!
Home Decors Idea : குறைவான பட்ஜெட்டில் உங்கள் பால்கனியை அலங்கரிக்க வேண்டுமா? இதோ இவற்றை முயற்சியுங்கள்!

தரை

உங்கள் பால்கனியில் உள்ள தரைகள் எப்படி இருக்கவேண்டும் என்று பாருக்ங்கள். அதில் நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்யலாம். செயற்கை புல் தரைபோன்ற தரைவிரிப்புகளை விரிக்கலாம் அல்லது அதில் வண்ணம் தீட்டலாம். தரைக்க பிங்க் வண்ணமடித்து அதில் சில பூக்களின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம் அல்லது உங்களுக்கு பிடித்த வண்ணங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதை செய்ய உங்களுக்கு நேரமில்லையென்றால், மிகவும் எளிய வழி உள்ளது. செயற்கை புல்வெளி போன்ற தரை விரிப்புகள் உள்ளது. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

செடிகள் மற்றும் தொட்டிகள்

உங்கள் வீட்டு பால்கனியை அலங்கரிக்க செடிகள் மற்றும் தொட்டிகள் மிகவும் நல்லது. அவை பட்ஜெட் ஃபிரண்டிலியும் ஆகும். மேலும் உங்கள் வீட்டுக்கு தேவையானவற்றையும் அதில் இருந்து பெறலாம். நீங்கள் இந்த தொட்டிகயை கடைகளில் இருந்து வாங்கிக்கொள்ளலாம். பூச்செடிகள் மற்றும் மூலிகைச்செடிகள் உங்கள் வீட்டுக்கும் உபயோகமாக இருக்கும். பால்கனியையும் அலங்கரிக்கும்.

குஷன் மற்றும் மெத்தைகள்

பால்கனியில் ஒரு ஓரத்தில், நன்றாக பார்க்க முடிந்த இடத்தில், அலங்காரமான தலையணைகள், சிறிய மெத்தைகள் என இடத்தை அலங்கரிக்கும் பொருட்களை வாங்கி வைக்கலாம். நல்ல வெளிர், ஈர்க்கும் நிறங்களை பயன்படுத்தினால், அது உங்கள் வீட்டுக்கு நல்ல அழகைத்தரும்.

தரைவிரிப்புகள்

பால்கனிகள் பெரும்பாலும் படுக்கையறையுடன்தான் இணைந்திருக்கும். எனவே பெரிய, மிருதுவான தரைவிரிப்புகளை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். பால்கனியின் நுழைவில் அதை விரித்துப்போடும்போது, அது அந்த பால்கனிக்கே அழகைத்தரும். நீங்கள் படுக்கையறைக்குள் நுழையும்போது கால்களில் உள்ள மண், தூசியை தட்டிவிட்டு வருவதற்கு எளிதாக இருக்கும்.

எல்இடி லைட்கள்

உங்கள் வீட்டு பால்கனியை அழகான விளக்குகளால் அலங்கரித்தால், அது உங்கள் வீடு முழுமைக்கும் அழகிய தோற்றத்தை தரும். குறிப்பாக மாலை வேளையில் உங்கள் பால்கனி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எனவே சிறிய விளக்குகள், எல்இடி லைட்கள், மஞ்சள் விளக்குகள், வண்ண விளக்குகள் எனப் பொருத்தி அழகுபடுத்துங்கள்.

பழைய துணிகளை பயன்படுத்துங்கள்

உங்கள் வீட்டில் பழைய துணிகள் இருந்தால், அதைப்பயன்படுத்தி, சதுரம் மற்றும் நட்சத்திர வடிவில் அவற்றை வெட்டி தைத்து அலங்காரம் செய்து சுவார்களில் மாட்டுங்கள். அது பால்கனிக்கு அழகைத்தரும். உங்கள் பழைய துணியையும் மறுசுறுழற்சி செய்துவிட்ட திருப்தி கிடைக்கும். உங்களுக்கு பணமும் செலவாகாது. இப்படி எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அதை மாட்டிவிட்டு அதை சுற்றி விளக்கு அல்லது மயில் தோகைகளை வைத்து அலங்காரம் என எதுவும் செய்யவேண்டாம்.

வெர்டிகல் தோட்டம்

உங்கள் பால்கனியில் சிறிய அளவுதான் இடம் உள்ளது என்றால், அதில் நீங்கள் வெர்டிக்கல் தோட்டம் அமைக்கலாம். வெர்டிக்கல் தோட்டம் என்றால், சுவரில் நேராக செடிகள் வளர்ப்பது, அதற்கு ஏற்றார்போல் தொட்டிகள் மற்றும் அமைப்புகளை வாங்கி அலங்கரிப்பமுது என்பதாகும். தொங்கும் தொட்டிகளில் பூச்செடிகள் வைத்து அலங்கரிக்கலாம். ஜன்னல்களில் வளர்க்கலாம். எனவே நீங்கள் உங்களுக்கு உள்ள குறைவான இடத்தைக் கூட அதிகளவில் பயன்படுத்தலாம்.

DIY அலங்காரங்கள்

நீங்களே தயாரிக்கும் அலங்காரப்பொருட்களை வைத்து உங்கள் பால்கனியை அலங்கரிக்கலாம். அது உங்கள் வீட்டுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளத்தை தரும். மேலும் பட்ஜெட் ஃபிரண்ட்லியாகவும் இது இருக்கும். எனவே உங்கள் பால்கனியின் சுவர்களுக்கு வித்யாசமான வண்ணங்கள் பூசலாம். செடிகள் வைத்துள்ள தொட்டிகளை வண்ணமயமாக்கலாம். உங்களுக்கு பிடித்த டிசைன்களை அதில் செய்யலாம். பால்கனியின் சுவர்களில் வண்ணம் தீட்டலாம்.

கர்டன்கள்

உங்கள் பால்கனியை அலங்கரிக்க கர்டன்களைப் பயன்படுத்தலாம். அது உங்கள் பால்கனிக்கு சிறப்பான தோற்றத்தை தரும். எனவே அழகான கர்டன்களை வாங்கி அழகுபடுத்துங்கள். உங்கள் பால்கனி இன்னும் அழகாக இருக்கும்.

டேபிள்

பால்கனியில் டீ டேபிள் போடலாம். அழகான இரண்டு சேர்கள், டீ பருகுவதற்கான இடம் போன்ற தோற்றத்தை தரும். அந்த டேபிளில் ஒரு அழகிய டீ கெட்டில் வைத்து அலங்கரிக்கலாம். இன்னும் நன்றாக இருக்கும். சிறிய, வட்ட, மரத்தலான டேபிள், குஷன் வைத்த இரண்டு சேர்கள் உங்கள் பால்கனிக்கு அழகிய தோற்றத்தை தரும். உங்கள் வீட்டின் அழகை அதிகரிக்கும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.