தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Iit Madras : ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே! ஐஐடி மெட்ராஸில் ஒரு நாள் பயிற்சி! - விவரங்கள் உள்ளே

IIT Madras : ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே! ஐஐடி மெட்ராஸில் ஒரு நாள் பயிற்சி! - விவரங்கள் உள்ளே

Priyadarshini R HT Tamil
Jun 17, 2023 11:25 AM IST

IIT Madras : ஐஐடி மெட்ராஸில் ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் 24ம் தேதி நடக்கிறது. ஆஸ்க் ஐஐடிஎம் என்பதின் அங்கமாக முன்னாள் மாணவர்கள் இந்த பயிற்சியை நடத்துகிறார்கள். இதில் கல்வி சுற்றுலா, எதிர்காலம் குறித்த கவுன்சிலிங், டெமோ க்ளாஸ்கள் ஆகியவை நடத்தப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது ஐஐடியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேசலாம். கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலலாம் என்று ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும், மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஐஐ இயக்குனர் காமகோடி கூறுகையில், 2000 - 2009ம் ஆண்டு வரையில் ஜேஇஇ மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக கவுன்சிலிங்கில் கலந்துகொள்வேன். அதில் ஜேஇஇ பயிற்சி பெறும் மாணவர்கள் வருவார்கள். எங்களிடம் பேசுவார்கள். நாங்கள் அவர்களுக்கு பாடத்திட்டம், விளையாட்டு, பாதுகாப்பு வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் உணவு ஆகியவை குறித்து விளக்குவோம்.

இதனால் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனம் நிம்மதி அடையும். அச்சம் விலகும். 2010ம் ஆண்டு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்தும் ஆன்லைன் ஆனது. இந்தாண்டு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு வந்து அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு, ஆன்லைன் கவுன்சிலிங்கில் அவர்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க முயும் என்றார்.

இந்த நிகழ்ச்சி முன்னாள் மாணவர்களின் ஆஸ்க்ஐஐடிஎம் மற்றும் மாணவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

ஜேஇஇ மாணவர்கள் தங்களின் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடை பெறலாம். இந்த கல்வி வளாகம், ஆசிரியர்கள், இங்கு வழங்கப்படும் கோர்ஸ்கள் ஆகியவை குறித்து www.askiitm.com என்ற ஆன்லைனிலும் கேட்கலாம். ஐஐடி முன்னாள் மாணவர்கள் அல்லது தற்போது படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பதில் கொடுப்பார்கள்.

மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஐஐடி மெட்ராஸ் குறித்து உள்ளது. அவற்றில் இருந்தும் நீங்கள் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற அவர் மேலும் தெரிவித்தார். ‘

அம்ருதா மிஸ்ரா என்ற ஐஐடி முன்னாள் மாணவி இந்த முன்னெடுப்பை செய்து வருகிறார். ‘கடந்த ஆண்டு எங்களுக்கு கிடைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாங்கள் நிறைய வீடியோக்களை தயாரித்தோம். குறிப்பாக வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளுக்கு, நாங்கள் தனியாகவே ஒரு தளத்தை உருவாக்கினோம். 

அதில் வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஜேஇஇ மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை உள்ளது. எனவே அவர்கள் எப்படி வேண்டுமானாலும் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்