தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இக்னோ பல்கலை. தொலைதூரக் கல்வி சேர்க்கை நீட்டிப்பு–எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?

இக்னோ பல்கலை. தொலைதூரக் கல்வி சேர்க்கை நீட்டிப்பு–எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?

Priyadarshini R HT Tamil
Mar 24, 2023 05:15 PM IST

Education Information : இக்னோ பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் வாயிலாக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு 2023 ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (சான்றிதழ் படிப்பு மற்றும் செமஸ்டர் முறையிலான படிப்புகளுக்கு இது பொருந்தாது) தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://www.ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி மார்ச் 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பட்டியல் வகுப்பினருக்கு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழ இணையதளமான www.ignou.ac.in என்பதில் தெரிந்துகொள்ளலாம். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கிவரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து சில கல்வி செய்திகளை இப்பகுதியில் தெரிந்துகொள்ளலாம். 

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்பவர்கள் 8ம் வகுப்பு வரை கட்ட ணம் செலுத்தாமல் இலவசமாகப் படிக்கலாம். இவர்களுக்கான கல்விக் கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.350 கோடி வழங்கப்படுகிறது. இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்டிஇ திட்டத்தின் கீழ் நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான வலைதள வடிவமைப்பு உட்பட முன்னேற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த பணிகளை முடித்து ஏப்ரல் 3வது வாரம் முதல் விண்ணப்பப் பதிவை தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெற்றோர், பள்ளிசேர்க்கைக்குத் தேவையான சாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்து கொள்ள வேண்டும் பள்ளிக்கல்வித்துறை வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்