HT Flop Story: 'மார்க்கெட்டிங் கோளாறால் பல நூறு கோடி இழப்பு!’ கிரிஸ்டல் பெப்சி தோற்ற கதை!
”HT Flop Story: கிரிஸ்டல் பெப்சி அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறுத்தப்பட்டாலும், மார்க்கெட்டிங் துறையில் ஒரு அழியாத சோக முத்திரையை பதித்துள்ளது-”
தோல்வி அடைந்த பிராண்டுகள் குறித்தும் தொழில்முனைவோர்கள் குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் விளக்கும் வணிகத் தொடர் ’HT Flop Story’
HT Flop Story தொடரில் கார்பரேட் உலகில் பழம் தின்று கொட்டை போட்ட டாடா நானோ தொடங்கி ஸ்டார் அப் நிறுவனமான Pets.com வரை தோற்று போன கதைகளை பார்த்து வருகிறோம். வணிக வரலாற்றில் நடந்த சில சம்பவங்கள் நுகர்வோரின் எண்ணங்களை அவ்வுளவு எளிதில் கணித்துவிட முடியாது என்பதற்கான சான்றுகளாய் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் சறுக்கிய சம்பவங்கள் இன்று வரை நினைவுக்கூறத்தக்கதாக உள்ளது.
1990 களின் முற்பகுதியில் பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெப்சி நிறுவனம் கிரிஸ்டல் பெப்சியை அறிமுகம் செய்தது. நிறங்கள் ஏதும் சேர்க்காமல் பார்ப்பதற்கு தண்ணீர் போல காட்சி அளிக்கும் இந்த சோடா குளிர்பானங்கள் குளிர்பானத் துறையில் புரட்சியை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு.
கிரிஸ்டல் பெப்சியின் பிறப்பு
கோகோ-கோலா மற்றும் பெப்சிகோ போன்ற சோடா நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டியின் சூழலில், 1992 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் பெப்சி அறிமுகம் ஆனது. இது பாரம்பரிய கோலா பானங்களில் இருந்து வேறுபட்டது, புதுமையாது என்பன போன்ற பில்டப்புகள் செய்யப்பட்டது.
மிருதுவான, சிட்ரஸ் சுவையுடன் கூடிய காஃபின் இல்லாத, தெளிவான கோலாவாக சந்தைப்படுத்தப்பட்ட கிரிஸ்டல் பெப்சி, அக்காலத்தின் வளர்ந்து வரும் ஆரோக்கிய உணர்வுள்ள நுகர்வோர் போக்கைத் தட்டியெழுப்ப ஒரு துணிச்சலான முயற்சியாக பார்க்கப்பட்டது.
கிரிஸ்டல் பெப்சியின் தூய்மை மிக்க வெளிப்படையான தோற்றம், புத்துணர்ச்சி மற்றும் சோடா சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கை வண்ணங்களில் இருந்து விலக்கி காட்டுதல் உள்ளிட்டவை இதன் தனித்துவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் அம்சமாக சொல்லப்பட்டது.
ஆரம்ப வெற்றி
பிரபலங்களின் பளிச்சிடும் விளம்பரங்கள் உள்ளிட்ட பல மில்லியன் டாலர் பிரச்சாரம் மூலம் கிரிஸ்டல் பெப்சி சந்தைக்கு வந்தது. அபரிமிதமான ஆர்வம், நேர்மறையான வரவேற்பு ஆகியவற்றின் மீது சவாரி செய்து, அதன் அறிமுக கட்டத்தில் ஈர்க்கக்கூடிய விற்பனையை கிரிஸ்டல் பெப்சி பெற்றது. ஆனால் பின்னர் நடந்தது வேறு.
சறுக்கல்கள்
இருப்பினும், கிரிஸ்டல் பெப்சியின் ஆரம்ப வெற்றி குறுகிய காலமே நீடித்தது. மேலும் அதன் வீழ்ச்சியானது அதன் ஏற்றத்தைப் போலவே மிக வேகமாக இருந்தது. அதன் தொடக்கம் உற்சாகம் மிகுந்ததாக இருந்தபோதிலும், தெளிவான சோடா ஒரு நிரந்தர மாற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு பாரம்பரிய கோலா பானங்களில் இருந்து வேறுபட்ட சுவையை வழங்கவில்லை என்ற விமர்சனங்கள் பின் தொடர தொடங்கின.
கிரிஸ்டல் பெப்சியின் பெயருக்கு ஏற்ற வெளிப்படையான தோற்றம் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதோடு, சுவை பற்றாக்குறையுடன் தொடர்பு படுத்தி பேச காரணமானது.
மார்கெட்டிங் மிஸ்டேக்குகள்!
கிரிஸ்டல் பெப்சியின் சந்தைப்படுத்தல் உத்தி, துணிச்சலான மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும், இறுதியில் முக்கியமான நுகர்வோர் கவலைகளை நிவர்த்தி செய்வதில் தோல்வியடைந்தது.
பானமானது வழக்கமான கோலா பானங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டினாலும், சுவை வேறுபாட்டை தனித்து காட்டி எடுத்து செல்வதில் தோல்வி அடைந்தது. அதன் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட தயாரிப்புகளின் நன்மைகளை போதுமான அளவில் தெரிவிக்கத் தவறியது.
அதன் வீழ்ச்சிக்கு கணிசமாக பங்களித்தது என்பது பலரின் பார்வையாக உள்ளது. இதற்கு எல்லாம் மேலாக கிரிஸ்டல் பெப்சியின் விலையானது வழக்கமான கோலா பானங்களை விட அதிகமாக இருந்தது மக்களிடம் வரவேற்பு குறைந்ததற்கான வேறு காரணமாக சொல்லப்படுகிறது.
கற்றுத் தந்த பாடம்
கிரிஸ்டல் பெப்சியின் தோல்வியானது சந்தைப்படுத்தல் வரலாற்றில் ஒரு எச்சரிக்கை சம்பவமாக மாறியது. நுகர்வோர் விருப்பங்களைப் புரிந்துகொள்வது, தயாரிப்பு மதிப்பை திறம்பட விளக்குவது, புகுத்தப்பட்ட புதுமைகள் மற்றும் அதன் நன்மைகள் ஆகியவை நுகர்வோரின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்து பார்க்க காரணமானது.
கிரிஸ்டல் பெப்சி அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறுத்தப்பட்டாலும், மார்க்கெட்டிங் துறையில் ஒரு அழியாத சோக முத்திரையை பதித்துள்ளது.
டாபிக்ஸ்