HT Success story: ’Cut Copy Paste பண்ணா! பணம் கொட்டும்!’ வணிக உலகின் அட்லி! சாம்வர் பிரதர்ஸ் வெற்றிக் கதை!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Success Story: ’Cut Copy Paste பண்ணா! பணம் கொட்டும்!’ வணிக உலகின் அட்லி! சாம்வர் பிரதர்ஸ் வெற்றிக் கதை!

HT Success story: ’Cut Copy Paste பண்ணா! பணம் கொட்டும்!’ வணிக உலகின் அட்லி! சாம்வர் பிரதர்ஸ் வெற்றிக் கதை!

Kathiravan V HT Tamil
Oct 26, 2023 06:40 AM IST

”தற்போது தமிழ் சினிமாவில் சர்ச்சையை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சம்பவம்தான் வணிக உலகில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது”

சாம்வர் சகோதரர்கள் - இயக்குநர் அட்லி
சாம்வர் சகோதரர்கள் - இயக்குநர் அட்லி

சினிமா விமர்சகர்கள் இதனை ’காப்பி’ என்று என்று சொல்லி கிண்டல் அடித்தாலும் ‘இது இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்துவிடுகின்றனர் இந்த நவீன கால இயக்குநர்கள். 

தற்போது தமிழ் சினிமாவில் சர்ச்சையை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சம்பவம்தான் வணிக உலகில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

சாம்வர் சகோதரர்கள்

சாம்வர் சகோதரர்கள் என அறியப்படும் மார்க், அலெக்சாண்டர் மற்றும் ஆலிவர் ஆகியோர் காப்பி அடிப்பதன் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு உதாரணம். 

ஜெர்மனி நாட்டை சேர்ந்த சாம்வர் சகோதரர்களுக்கு தொழில் முனைவோர் மனப்பான்மை சிறு வயதில் இருந்தே வெளிப்பட்டது. 

மார்க் மற்றும் ஆலிவர் சட்டத்தில் பட்டம் பெற்றார், அலெக்சாண்டர் வணிக நிர்வாகத்தைப் படித்தார். அவர்களின் கல்விப் பின்னணி எதிர்கால வணிக முயற்சிகளுக்கு வலுவான அடித்தளத்தை கொடுத்தது.

அலண்டோவை நிறுவுதல்

1999ஆம் ஆண்டு நடந்த டாட்-காம் புரட்சியின்போது, சாம்வர் சகோதரர்கள் கவனம் அமெரிக்காவை நோக்கி சென்றது. அமெரிக்காவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ஈபே நிறுவனத்தை போல் ஜெர்மனியிலும் ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்ட சகோதரர்கள் ஈ-பே நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, அதே போன்றதொரு நிறுவனத்தை ’அலாண்டோ’ என்ற பெயரில் ஜெர்மனியில் தொடங்கினர்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து விறுவிறு வளர்ச்சி அடைந்தது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து 100 நாட்களில் $50 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஈ-பே நிறுவனமே ’அலாண்டோ’வை வாங்கியது.

ராக்கெட் இண்டர்நெட்

சாம்வர் சகோதரர்களின் அடுத்த முயற்சி ராக்கெட் இன்டர்நெட் ஆகும், இது 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இன்குபேட்டர் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனமாகும். 

ராக்கெட் இன்டர்நெட் வளர்ந்து வரும் சந்தைகளில் வெற்றிகரமான இணைய வணிக மாதிரிகளை பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது. நிறுவனம், Zalando, Home24 மற்றும் Jumia உட்பட, உலகம் முழுவதும் பல இ-காமர்ஸ் நிறுவனங்களை உருவாக்கி சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. 

Zappos என்பது Zalando ஆனது

சாம்வர் சகோதரர்களின் எமுலேஷன் உத்தியின் மிக முக்கியமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று ’ஜலாண்டோ’ ஆகும், இது ஷூ உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமான Zappos-வின் வணிக கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. Zalando நிறுவனம் 2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது ஐரோப்பாவின் முன்னணி ஆன்லைன் ஃபேஷன் தளமாக வளர்ந்துள்ளது.

ஐரோப்பாவின் அமேசானை உருவாக்குதல்

சாம்வர் சகோதரர்கள் ஜலாண்டோ உடன் நிற்கவில்லை. அவர்கள் அமேசான் போன்ற நிறுவனத்தை ஜெர்மனியில் தொடங்க நினைத்தனர். இதன் எதிரொலியாக Home24 என்ற ஆன்லைன் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தளத்தை உருவாக்கினர். இது அமெரிக்காவின் வேஃபேர் நிறுவனத்தின் க்ளோனிங்க் ஆக இருந்தது. தற்போது Home24 நிறுவனம் ஜெர்மன் சந்தையில் செழித்து வளர்ந்துள்ளது.

சவால்கள் மற்றும் சர்ச்சைகள்

அமெரிக்க வணிக நிறுவனங்களை காப்பி அடிக்கும் சாம்வர் சகோதரர்களின் அணுகுமுறை சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. 

மற்ற சந்தைகளில் இருந்து வெற்றிகரமான வணிக மாதிரிகளை நகலெடுத்து புதிய பிராந்தியங்களில் செயல்படுத்தி லாபம் பார்ப்பதாக அவர்கள் மீது விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த அணுகுமுறை, பெரும்பாலும் "குளோனிங்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த குளோனிங் முறையிலான வணிக மாடல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் அதே வேளையில் விமர்சனங்களும் வரிசைக்கட்டி நிற்கின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.