DMK VS BJP’அருவருப்பு, கேலிக்கூத்து, தலைகுனிவு!’ திமுக செயற்குழுவில் வச்சு செய்யப்பட்ட அமித்ஷா!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Vs Bjp’அருவருப்பு, கேலிக்கூத்து, தலைகுனிவு!’ திமுக செயற்குழுவில் வச்சு செய்யப்பட்ட அமித்ஷா!

DMK VS BJP’அருவருப்பு, கேலிக்கூத்து, தலைகுனிவு!’ திமுக செயற்குழுவில் வச்சு செய்யப்பட்ட அமித்ஷா!

Kathiravan V HT Tamil
Dec 22, 2024 11:11 AM IST

நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு.

DMK VS BJP’அருவருப்பு, கேலிக்கூத்து, தலைகுனிவு!’ திமுக செயற்குழுவில் வச்சு செய்யப்பட்ட அமித்ஷா!
DMK VS BJP’அருவருப்பு, கேலிக்கூத்து, தலைகுனிவு!’ திமுக செயற்குழுவில் வச்சு செய்யப்பட்ட அமித்ஷா!

திமுக செயற்குழு கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, ஆ.ராசா, பொன்முடி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இதில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

உள்துறை அமைச்சருக்கு திமுக செயற்குழு கண்டனம்.

அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் - அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து- இரவு பகலாக பாடுபட்டு - உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில் - வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத - எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதை விட கேலிக்கூத்தானது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

ஒன்றிய அரசே! ஃபெஞ்சல் புயல் பேரிடர் நிதியை தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்கிடுக!

ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி ரூபாய் பேரிடர் நிதி கோரி- அதில் அவசரமாக 2000 கோடி ரூபாய் பேரிடர் நிதியை முதல் கட்டமாக அளித்திடும்படி மாண்புமிகு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து - அதன்பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த ஒன்றியக் குழுவிடமும் வலியுறுத்தியுள்ள நிலையில் - தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்த மாநில பேரிடர் நிதியிலிருந்து 944.80 கோடி ரூபாய் வழக்கமான நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதே தவிர, ஃபெஞ்சல் புயலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோரியை அவசரத் தொகை 2000 கோடியையோ அல்லது நிரந்தர

மறுசீரமைப்புக்கான 6675 கோடி ரூபாயையோ இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்காமல் - தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு இந்த செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றிய அரசு பேரிடர் நிதி என்பது பா.ஜ.க.வின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி - இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.