Top 10 News: நடிகை கஸ்தூரியை கடுமையாக விமர்சித்த வீரலட்சுமி, பிக் பாஸுக்கு தடை விதிக்க கோரிக்கை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: நடிகை கஸ்தூரியை கடுமையாக விமர்சித்த வீரலட்சுமி, பிக் பாஸுக்கு தடை விதிக்க கோரிக்கை

Top 10 News: நடிகை கஸ்தூரியை கடுமையாக விமர்சித்த வீரலட்சுமி, பிக் பாஸுக்கு தடை விதிக்க கோரிக்கை

Manigandan K T HT Tamil
Nov 05, 2024 02:28 PM IST

தனது ஏஜென்சியில் உரம் வாங்கும் 100 விவசாயிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் அழைத்து சென்ற பிருந்தா ஏஜென்சி உரிமையாளார். மேலும் டாப் 10 செய்திகளைப் பார்ப்போம்.

Top 10 News: நடிகை கஸ்தூரியை கடுமையாக விமர்சித்த வீரலட்சுமி, பிக் பாஸுக்கு தடை விதிக்க கோரிக்கை
Top 10 News: நடிகை கஸ்தூரியை கடுமையாக விமர்சித்த வீரலட்சுமி, பிக் பாஸுக்கு தடை விதிக்க கோரிக்கை
  •  தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
  •  தனது ஏஜென்சியில் உரம் வாங்கும் 100 விவசாயிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் அழைத்து சென்ற பிருந்தா ஏஜென்சி உரிமையாளார். ஸ்பிக் உர நிறுவனத்திடம் உரம் வாங்கி சுமார் 21 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஏஜென்சி விற்று வருகிறது. இந்த பயணத்தின் மூலம் தாங்கள் வாங்கும் உரம் தயாரிக்கப்படும் ஸ்பிக் உர நிறுவனத்தை விவசாயிகள் சுற்றி பார்க்க உள்ளனர்.

கனமழைக்கு எச்சரிக்கை

  •  தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னயில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
  •  கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஐடி வளாகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.114.16 கோடி செலவில் 3.04 ஏக்கர் பரப்பில் 8 தளங்களுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த அன்புமணி

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
  •  சீமான், சாட்டை துரைமுருகனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். சீமான் குறித்து 15 ஆடியோக்களை பதிவேற்றம் செய்திருப்பதை சுட்டிக் காட்டி சூர்யா மனு தாக்கல் செய்திருக்கிறார்.
  •  தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மத்திய மாநில அரசுகள் தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  •  “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக இடம்பெறும்; இதில் கேள்விக்கே இடமில்லை" -என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
  •  கோவையில் மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய போலீஸ். அப்பாவியை தாக்கிய காவலர் ரஞ்சித்தை ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  •  பாலிடெக்னிக் மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் வீடு புகுந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கார் மோதுவது போல வந்தது குறித்து கேள்வி கேட்டதற்காக, அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.