Weather Update : உஷார் மக்களே.. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை கொட்டுமாம்!
Weather Update Today : கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

Weather Update : உஷார் மக்களே.. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை கொட்டுமாம்! (AP)
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுச்சேரியில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை :- நாமக்கல் AMFU : 35.7° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 20.0 ° செல்சியஸ்