Black Urad Tirupathi vadai : ‘கோவிந்தா கோவிந்தா’ இதோ கருப்பு உளுந்து திருப்பதி வடை! இதையும் வீட்டிலே செய்யலாம்!
Black Urad Tirupathi vadai : ‘கோவிந்தா கோவிந்தா’ இதோ கருப்பு உளுந்து திருப்பதி வடை! இதையும் வீட்டிலே செய்யலாம்!

திருப்பதியில் பெருமாளுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டாலும், அங்கு கருப்பு உளுந்து வடையும் பிரதான பிரசாதம் ஆகும். அந்த வடை கருப்பு உளுந்தில் செய்யப்படுவதால் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதை நீங்கள் வீட்டிலே எளிதாக செய்யமுடியும். வெள்ளை உளுந்தில் செய்யப்படும் வடையை நீங்கள் பந்துபோல் மெத்தென செய்யலாம். ஆனால் இந்த வடையை நீங்கள் தட்டையாகத்தான் தட்ட முடியும். ஏனெனில் அதில் உளுந்தின் தோலும் சேர்வதால் இப்படி மாறிவிடும். இந்த வடையை பெண்கள் மாதவிடாய் காலம் மற்றும் பூப்பெய்திய காலத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த நேரத்தில் ஏற்படும் அசவுகர்யங்களை போக்கும் திறன் கருப்பு உளுந்துக்கு உள்ளது. எனவே பெண்களின் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் இந்த வடைக்கு கட்டாய இடம் கொடுப்பது அவசியம். இந்த வடையை செய்வதும் எளிது. கருப்பு உளுந்தில் செய்வதால் இது வித்யாசமான சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – தாராளமாக பொரிக்க தேவையான அளவு
கருப்பு உளுந்து – கால் கப்