தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Rain Alert: மக்களே உஷாா்.. இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!

TN Rain Alert: மக்களே உஷாா்.. இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை!

Karthikeyan S HT Tamil
Dec 12, 2023 01:52 PM IST

தமிழகத்தில் இன்று (டிச.12) 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை (கோப்புபடம்)
கனமழை (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13.12.2023 முதல் 15.12.2023: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16.12.2023: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

17.12.2023: தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிசி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 6 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point