தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரூ.30 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நித்யானந்தா ஆசிரம்..அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

ரூ.30 கோடி அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நித்யானந்தா ஆசிரம்..அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

Karthikeyan S HT Tamil
Aug 16, 2023 10:48 AM IST

Nithyananda Ashram Land: சென்னை பல்லாவரத்தில் நித்யானந்தா ஆசிரமத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

நித்யானந்தா
நித்யானந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை, பல்லாவரம் அடுத்த திரிசூலம், பச்சையம்மன் கோயில் குவாரி சாலை பகுதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்துக்கு அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலம் உள்ளது.

அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக நித்யானந்தா ஆசிரமம் மீது தொடர் புகார் எழுந்தது. அதே போன்று அந்த நிலத்தை வேறு சிலரும் ஆக்கிரமித்து அதில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதையறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுதொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்ய மறுத்து வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் முழுவதும் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். பின்னர் தனியார் வசம் இருந்த அரசு நிலத்தை மீட்டனர். சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை நித்தியானந்தா ஆசிரமத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்ததது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்