தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Get Result : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு – லிங்க் உள்ளே….

Get Result : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு – லிங்க் உள்ளே….

Priyadarshini R HT Tamil
Mar 24, 2023 06:48 PM IST

TNPSC Group 4 Result : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியது. அந்த லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்ததால், டுவிட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாக்கினார்கள். மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாஜ டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கையில், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாட்களில் அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் Group-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த முடிவுகளை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளுங்கள். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்