MR Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mr Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

MR Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

Kathiravan V HT Tamil
Jul 16, 2024 03:57 PM IST

தனது அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன் ஜாமீனை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.

MR Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
MR Vijayabhaskar Arrest:100 கோடி நில மோசடி வழக்கு! கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

100 கோடி நிலமோசடி வழக்கு

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

முன் ஜாமின் மனு தள்ளுபடி 

இந்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நில மோசடி வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே தன் மீதான வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

தனது அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன் ஜாமீனை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார்.

சிபிசிஐடி ரெய்டு 

இதனிடையே கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல் உத்தரவை தள்ளி வைத்து இருந்தனர். இதனிடையே கடந்த ஜூலை 5ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்பு உடையவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

கேரளாவில் கைது 

கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரணை செய்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவரது சகோதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

14 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கரூரில் பதுங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கைது செய்யப்பட்டார்.

கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

சிபிசிஐடி காவல்துறையால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், “கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன, இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி திரு. செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்!” என தெரிவித்து உள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.