Tamil Live News Updates : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இரு வழக்குகளில் முன்ஜாமீன்
இன்றைய (11.07.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்
Tue, 11 Jul 202304:44 PM IST
5% ஜிஎஸ்டி வரிதான்
திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு, குளிர்பானங்களுக்கான ஜிஎஸ்டி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tue, 11 Jul 202304:12 PM IST
பிரதமருடன் முஸ்லிம் உலக லீக் செயலாளர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை முஸ்லிம் உலக லீக் செயலாளர் ஷேக் முகமது பின் அப்துல்கரீம் அல்-இசா சந்தித்து பேசினார்.
Tue, 11 Jul 202303:39 PM IST
இரு வழக்குகளில் முன்ஜாமீன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின்போது தேர்தல் தகராறில் ஈடுபட்டது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
Tue, 11 Jul 202303:27 PM IST
28% ஜிஎஸ்டி வரி
ஆன்லைன் ரம்மி, குதிரை பந்தயம், கேசினோ உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுவரை இவை அனைத்தும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில், இனி 28% விதிக்கப்படுகிறது.
Tue, 11 Jul 202303:23 PM IST
விஜய் சேதுபதியின் 50வது படம்
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் 'Title Look' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குநர் நிதிலன் இப்படத்தை இயக்குகிறார்.
Tue, 11 Jul 202303:16 PM IST
பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
பள்ளிக் கல்வியிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tue, 11 Jul 202302:35 PM IST
மணலியில் பள்ளியில் ஆய்வு
சென்னை மணலியில் பள்ளி வளாகங்கள் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். ஆய்வின்போது பள்ளி மாணவர்களுடன் கேரம்போர்டு விளையாடி மகிழ்ந்தார்.
Tue, 11 Jul 202302:09 PM IST
'மன்னிப்பு கடிதம் கொடுத்தால்..'
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேருபவர்கள் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tue, 11 Jul 202301:37 PM IST
தக்காளி பவுடர் வேண்டும் - விக்கிரம ராஜா
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தக்காளியை பவுடர் செய்து வழங்க அரசு முன்வர வேண்டும் - வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா கருத்து
Tue, 11 Jul 202301:36 PM IST
சூதாட்டங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி
ஆன்லைன் ரம்மி, குதிரை பந்தயம், கேசினோ உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடந்தது
Tue, 11 Jul 202301:35 PM IST
முட்டை கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் வரை உயர்ந்து 4 ரூபாய் 40 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tue, 11 Jul 202311:23 AM IST
செந்தில் பாலாஜி வழக்கில் நாளை அமலாக்கத்துறை வாதம்
செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு மீதான மூன்றாவது நீதிபதியின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா நாளை தனது தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.
Tue, 11 Jul 202311:06 AM IST
தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
Tue, 11 Jul 202310:38 AM IST
மதுரை கலைஞர் நூலகம் ஜூலை 15 திறப்பு
மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15ம் தேதி திறந்து வைக்கிறார்
Tue, 11 Jul 202309:58 AM IST
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
Tue, 11 Jul 202309:08 AM IST
மருத்துவர்கள் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின் மாத்திரை மருந்துகளுக்கு உரிய மருத்துவ சீட்டு வழங்குவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உட்பட மருத்துவ அதிகாரிகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Tue, 11 Jul 202308:28 AM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி யார்?
கொடநாடு வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவே கருதுகிறோம்.கொடநாடு சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை - வைத்திலிங்கம்
Tue, 11 Jul 202307:51 AM IST
ஆதாரம் இல்லை
குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை; ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது.
அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது
- செந்தில் பாலாஜி தரப்பு
Tue, 11 Jul 202307:37 AM IST
ஜெயக்குமார் அதிரடி!
'அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தினால் குற்றம்' - ஜெயக்குமார் அதிரடி!
Tue, 11 Jul 202307:18 AM IST
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து!
சென்னை தலைமை செயலகத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆதவ் அர்ஜூன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
Tue, 11 Jul 202307:10 AM IST
ஓ.பன்னீர்செல்வம் மரியாதை!
Tue, 11 Jul 202307:06 AM IST
நீதிபதி கேள்வி!
நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?"
நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும் - நீதிபதி
Tue, 11 Jul 202307:04 AM IST
செந்தில்பாலாஜி வழக்கு
செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்புகளை கூறிய நிலையில் வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து செந்தில்பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்
Tue, 11 Jul 202306:42 AM IST
பனையூரில் விஜய் சந்திப்பு!
உள்ளே செல்லும் நிர்வாகிகள் செல்போன் உள்ளிட்ட எந்த வித எல்க்ரானிக் உபகரணங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சட்டைப்பையில் இருக்கும் பேனாவை கூட உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை எனக்கூறப்படுகிறது.
Tue, 11 Jul 202306:06 AM IST
தங்க தமிழ்செல்வன் கேவியட் மனு தாக்கல்
தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில், திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஒ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தங்க தமிழ்செல்வன் கேவியட் மனு தாக்கல்
Tue, 11 Jul 202305:43 AM IST
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு -810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்த வழக்கில், 810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை. குற்றப்பத்திரிகையுடன், 18000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tue, 11 Jul 202305:41 AM IST
மீண்டும் கேவியட் மனு தாக்கல்.
செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
Tue, 11 Jul 202305:04 AM IST
தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு!
கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார். பள்ளியில் உள்ள குறைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
Tue, 11 Jul 202305:04 AM IST
300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை!
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் மேலும் 300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
Tue, 11 Jul 202305:02 AM IST
அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை.
சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் பெரிய கருப்பன் ராஜகண்ணப்பன் சேகர்பாபு பொன்முடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை.
Tue, 11 Jul 202304:57 AM IST
ஏறுமுகத்தில் வெங்காயம் விலை!
திண்டுக்கல்லில் ஏறுமுகத்தில் வெங்காயம் விலை. மழை தொடர்ந்தால் விலை உயர்வு நீடிக்கும் என இடைத்தரகர்கள் கணித்துள்ளனர்.
Tue, 11 Jul 202304:45 AM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிராம் ரூ. 5,482க்கு விற்பனை செய்யப்படுகிறது
Tue, 11 Jul 202304:13 AM IST
பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
Tue, 11 Jul 202303:26 AM IST
பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை- ஈபிஎஸ் க்கு அழைப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tue, 11 Jul 202303:11 AM IST
9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
சென்னை காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரத்தில், சிவில் சப்ளை சிஐடி போலீசார் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில், லாரியுடன் இருந்த 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்துள்ளனர். ரேஷன் அரிசி பதுக்கல் காரர்களை காவல்துறை தேடி வருகின்றனர்
Tue, 11 Jul 202303:10 AM IST
பெட்ரோல் குண்டு வீச்சு - 6 பேர் கைது
தியாகி இம்மானுவேல் சேகரன் வீரன் சுந்தரலிங்கம் படத்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மீனாட்சி பட்டியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அனியாபரநல்லூரை சேர்ந்த 6 பேரை வைகுண்டம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Tue, 11 Jul 202303:04 AM IST
மகாராஷ்டிரா: ஒரே வாரத்தில் 3 முறை அணி மாறிய எம்.எல்.ஏ.!
தேசிய வாத காங்கிரஸ் எம்எல்ஏ மகரந்த் பாட்டீஸ் ஒரே வாரத்தில் 3முறை அணி மாறினார். இந்நிலையில் அஜித்பவர் அணியில் இருந்து சரத்பவார் அணிக்கு தாவிய பாட்டீஸ் தற்போது அஜித் பவார் அணிக்கு திரும்பி உள்ளார். தனது தொகுதியில் நலிந்த நிலையில் உள்ள கரும்பு ஆலைகளை மீட்க அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மகரந்த் பாட்டீல் விளக்கம் அளித்துள்ளர்.
Tue, 11 Jul 202302:34 AM IST
மகளிர் உரிமை தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்க தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2 கி.மீ. தொலைவுக்குள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Tue, 11 Jul 202302:11 AM IST
இலவச பிரியாணி விவகாரம் – சரத்குமார் வேதனை
அனைவரும் இலவசத்திற்காக இப்படி நின்றதை பார்த்து பெரும் தலைகுனிவாக எண்ணி வருந்துகிறேன். தன்மானத்தை இழந்து கிடைக்கும் இலவசம் சரியல்ல. நாம் உழைத்து, கடின உழைப்பால், முயற்சியால் ஈடுகின்ற பொருளைக் கொண்டு உண்ணும் உணவுதான் சிறப்பு என்று சிந்திப்பவன் நான்.
Tue, 11 Jul 202301:49 AM IST
GST கூட்டம்
GST கவுன்சிலின் 50வது கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
Tue, 11 Jul 202301:49 AM IST
கனமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tue, 11 Jul 202301:43 AM IST
அகழாய்வில் ஆண் பொம்மை கண்டெடுப்பு!
விருதுநகர் – வெம்பக் கோட்டை அகழாய்வில் 2.28 செ.மீ. உயரமும், 2.15 செ.மீ அகலமும் கொண்ட ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
Tue, 11 Jul 202301:36 AM IST
அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அரசு ஏசி பேருந்து சாகர் கால்வாயின் 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 18 பயணிகள் படுகாயமடைந்தனர்.
எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் முயன்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது.
Tue, 11 Jul 202301:33 AM IST
மகளிர் உரிமைத் தொகை
சாலையோரத்தில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாதோரையும் சேர்த்திட தமிழக அரசு விரிவான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
Tue, 11 Jul 202301:32 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து - இன்று விசாரணை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் – 4 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை செய்கிறது.
Tue, 11 Jul 202301:30 AM IST
சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,272 மில்லியன் கனஅடியாக உள்ளது
1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 143 மில்லியன் கனஅடியாக உள்ளது
500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 388 மில்லியன் கனஅடியாக உள்ளது
Tue, 11 Jul 202301:17 AM IST
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரனைக்கு வருகிறது.
Tue, 11 Jul 202312:23 AM IST
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை
வன்முறை நடைபெற்ற மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 19 மாவட்டங்களில் 696 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 18 பேர் வாக்குப்பதிவு நடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.
5.67 கோடி மக்கள் 2.06 லட்சம் வேட்பாளர்களை 73,887 இடங்களுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள்.
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள், மம்தாவுக்கும், பாஜகவுக்கு லிட்மஸ் தேர்வாகும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க தேர்தல்களில் வன்முறை புதிது கிடையாதுதான், ஏனெனில் கடந்த தேர்தலில் 2018ம் ஆண்டு 12 பேர் தேர்தல் வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தார்கள்.
Tue, 11 Jul 202312:23 AM IST
டெல்லியில் அதிகனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்
வரும் நாட்களில் டெல்லியில் அதிகன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று வானம் மேகமூட்டத்துடனும் நகரின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.