Vijayabaskar: ஜாமின் தர மறுத்த நீதிமன்றம்.. தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.. 7 தனிப்படைகள் அமைத்த சிபிசிஐடி
Vijayabaskar: மோசடி வழக்கில் முன்ஜாமின் கிடைக்காததை தொடர்ந்து சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவானார். தற்போது 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Vijayabaskar: நில மோசடி விவகாரத்தில் ரூபாய் 100 கோடி முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 25ஆம் தேதி தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இதைத்தொடர்ந்து அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதை தொடர்ந்து கடந்த 2016 முதல் 2021 வரை அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த விஜய்கா பாஸ்கர் மீது சொத்துக் குறிப்பு வழக்கு ஜிபிஎஸ் கருவி கொள்முதல் ஊழல் புகார் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் புகார்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்க நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டு கொலை மிரட்டல் எடுப்பதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த கொலை மிரட்டல் குறித்து மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் புகார் மனு அளித்திருந்தார்.
இதை தொடர்ந்து கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது காதரும் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு விவகாரம் குறித்து புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு
தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகாரை தொடர்ந்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் ஷோபனா யுவராஜ் பிரவீன் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதை அடுத்து இந்த மோசடி விவகாரததில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த ஜூன் 12-ம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போது விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தலைமறைவான விஜயபாஸ்கர்
இந்த மோசடி வழக்கில் முன்ஜாமின் கிடைக்காததை தொடர்ந்து சி பி சி ஐ டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவானார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்