தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp Vs Admk: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!

BJP Vs ADMK: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!

Kathiravan V HT Tamil
May 29, 2024 02:58 PM IST

Annamlai vs D Jayakumar: மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை!

BJP Vs ADMK: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!
BJP Vs ADMK: மதவெறி யானையை விட மதவெறி பாஜக ஆபத்தானது! அம்மாவின் நிலைப்பாடு இதுதான்! விளாசும் ஜெயக்குமார்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அதிமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கர சேவைக்கு ஆள் அனுப்பியவர் ஜெயலலிதா என்று அண்ணாமலை கூறி இருந்தார். 

’இது தான் அம்மாவின் உண்மையான நிலைப்பாடு’

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து அவர் பேசும் ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் டி.ஜெயக்குமார் பகிர்ந்து உள்ளார். 

அதில், இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் உரை!

இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார்.

இது தான் அம்மா அவர்களின் அன்றைய உண்மையான நிலைப்பாடு.

அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது.

அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்.

ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்!

ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும்

மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை!

தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பி அண்ணாமலை,தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.

முல்லை பெரியாறு விவகாரம்,மேகதாது-காவிரி விவகாரம்,பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டை சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது.

இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும், தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?

தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் அம்மாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்! என பதிவிட்டு உள்ளார்.

ஜெயலலிதா பேசியது என்ன?

“அரசியல் வாதிகள் அரசியல் லாபத்தை நோக்கமாக கொண்டு ஒரு சாரார் இந்துக்கள் பக்கமும், மறுசாரார் முஸ்லீம்கள் பக்கமும் சேர்ந்து கொண்டு பிரச்னையை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். இரு மதங்களையும் சார்ந்த தலைவர்கள் ஒரு இடத்தில் கூடி கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்ற நமது வேண்டுகோளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அதைத்தான் இரு மதங்களையும் சேர்ந்த மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள், அதுதான் நாட்டு நலனுக்கும் உகந்தது. இந்த பிரச்னையை தேர்தல் பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்பதை இந்திய வாக்காள பெருமக்களுக்கு எங்கள் கட்சியின் கோரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்” என ஜெயலலிதா அதில் பேசி உள்ளார். 

டி20 உலகக் கோப்பை 2024