தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சுற்றுலா பயணிகளே கவனம் .. கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல திடீர் தடை!

சுற்றுலா பயணிகளே கவனம் .. கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல திடீர் தடை!

Karthikeyan S HT Tamil
Aug 16, 2023 11:45 AM IST

Kodaikanal: கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குணா குகை, கொடைக்கானல்
குணா குகை, கொடைக்கானல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில், கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு 15 பேர் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் வந்த வேன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு சிலர் இருந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து வந்த மற்றொரு சுற்றுலா வேன் இவர்கள் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சம்பவ இடத்தில பலியானார். இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும், உயிருக்கு ஆபத்தான 7 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பராமரிப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சுற்றுலா தலங்களான மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட அனைத்தும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுஉத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்