தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fever : கேரளாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் – தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? – அறிவுறுத்தும் நிபுணர்கள்!

Fever : கேரளாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் – தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? – அறிவுறுத்தும் நிபுணர்கள்!

Priyadarshini R HT Tamil
Jul 04, 2023 01:01 PM IST

Rat Fever : எது எப்படி இருப்பினும் தமிழகத்தில் தற்போது மழை பெய்துவரும் சூழலில் கொசு தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால் தமிழகம் அதன் கடுமையான பலனை இந்த மழைக்காலத்தில் எதிர்கொள்ளும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் தமிழகத்திலும் மழை துவங்கிவிட்டது. மழை பெய்தால் நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது அரசின் கடமையாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே டெங்குவை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.

புவிவெப்பமடைதல் அதிகமாவதால், வேளை தவறி பெய்யும் மழை காரணமாகவும், வெப்பம் அதிகமாவது, நீர் தேங்குவது கொசுக்களின் (ஏடிஸ் எஜிப்டை, அல்போபிக்டஸ், விட்டாடஸ்) இனப்பெருக்கத்தைப் அதிகரித்து கொசுக்களால் ஏற்படும் நோய் பாதிப்பு/இறப்புகள் அதிகரித்து வருகிறது. புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தாமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது. நீர் தேங்குவதை தடுக்காமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது.

டெங்குவிற்கு சிகிச்சை ஏதும் இல்லாத நிலையில், டெங்குவை துவக்கத்திலேயே (முதல் வாரத்திலேயே) கண்டறிய உதவும் NS1 புரதப் பரிசோதனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா/மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பெரும்பாலும் இல்லை என்பதால் டெங்கு பாதிப்பு இருந்தும்,அதை கண்டறிய முடியாத சூழலே தமிழகத்தில் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செய்த ஆய்வில் சென்னையில் 94 சதவீதம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, பலருக்கு முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல், கண்டறியப்படாமல் இருந்ததாக PLOS ஆய்வு தெரிவிக்கிறது.

இந்நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தமிழக அரசு கூறினாலும், சிவகாசி-திருத்தங்கலில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு அரசு சம்பளத்தை பாதியாகக் குறைத்துள்ளது, அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு தடுப்பில் ஈடுபட்டுள்ள 20 பெண்கள் மற்றும் 4 ஆண் தொழிலாளர்களுக்கு, நாளொன்றுக்கு 8 மணி நேரப் பணிக்கு ரூ.428 கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.208ஆக குறைக்கப்பட்டு, பணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளோ,கொரோனா காலத்தில் நிதி அதிகம் ஒதுக்கப்பட்டது தற்போது குறைக்கப்பட்டுள்ளதால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருப்பினும் தமிழகத்தில் தற்போது மழை பெய்துவரும் சூழலில் கொசு தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டால் தமிழகம் அதன் கடுமையான பலனை இந்த மழைக்காலத்தில் எதிர்கொள்ளும்.

தமிழகத்தில் மழை பெய்து டெங்கு பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகம் உள்ளபோது டெங்கு பணியாளர்களுக்கு சம்பளத்தையும், பணி நேரத்தையும் குறைப்பது சரியா?

மழைக்குப் பின் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும், புவிவெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தாமதமின்றி உடனே நிறைவேற்றினால் மட்டுமே டெங்கு பரவலை ஓரளவாவிற்காவது கட்டுப்படுத்த முடியும் என்பதே அறிவியல் உண்மை. எனவே பொறுப்புணர்ந்து அரசு செயல்படவேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்திலும் காய்ச்சல் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. கோவையில் 48 வயது பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்