தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விவசாயிகள் எதிர்ப்பு: நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழகம் நீக்கம்!

விவசாயிகள் எதிர்ப்பு: நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழகம் நீக்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 08, 2023 12:44 PM IST

தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது

விவசாயம் - கோப்புபடம்
விவசாயம் - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த 3 பகுதிகளும் தமிழகத்தில் விவசாயம் செழித்து விளங்கும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் விவசாய பணிகளை தவிர வேறு எந்த வேலைகளையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த பகுதிகளில் எப்படி நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொள்ள முடியும்? என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதன் எதிரொலியாக தற்போது, தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் முடிவு குறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது, மத்திய அமைச்சர் திரு @JoshiPralhad அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் @BJP4TamilNadu சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்