Pudukkottai: “உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்”! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - பின்னணி தகவல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pudukkottai: “உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்”! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - பின்னணி தகவல்

Pudukkottai: “உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்”! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - பின்னணி தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 26, 2024 04:45 PM IST

Pudukkottai Suicide: உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் எனக்கூறி புதுக்கோட்டையில் தொழிலதிபர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் காரினுள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pudukkottai: “உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்”! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
Pudukkottai: “உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்”! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமுணசமுத்திரம் பகுதியில் செப்டம்பர் 25ஆம் தேதி காலையில் கார் ஒன்று சாலையோரம் நின்றுள்ளது. அந்த கார் ஜன்னல், கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது முன்பக்கத்தில் இருவர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி அடைக்கலம் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காரில் ஐந்து பேர் சடலமாக மீட்பு

இதையடுத்து நகர சிவ மடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வெகுநேரம் ஆனபோதிலும் அந்த கார் நகராமல் அதே இடத்தில் நின்றுள்ளது. இதனால் மடத்தில் பணிபுரியும் காவலாளி அடைக்கலம் சந்தேகம் அடைந்த நிலையில் கார் அருகே ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது காரின் உள்ள இருந்தவர்கள் மூச்சு, பேச்சு இல்லாமல் இருந்துள்ளனர். உடனடியாக நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரின் கதவை திறந்து பார்த்தபோது அதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சடலமாக இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து 5 பேர் உடல்களையும் மீட்ட போலீசார், உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் பிரச்னையால் தற்கொலை?

பின்னர் கார் பதிவு எண் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், அந்த கார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தது எனவும், காருக்குள் இறந்து கிடந்தது சேலம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (50), அவரது மனைவி நித்யா (48), தாயார் சரோஜா (70), மகள் நிகரிகா (22), மகன் தீரன் (20) என தெரியவந்தது. காரில் போலீசார் நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்வதாக குறிப்படப்பட்டிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மது பாட்டில்களும், கப்புகளும் இருந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும், புதுக்கோட்டைக்கு காரில் வந்திருந்தபோது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலமாக மீட்கப்பட்ட அனைவரும் கடந்த மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். மணிகண்டன் அவரது வீட்டிலேயே எஸ்எம் மெட்டல் என்ற அலுவலகம் நடத்தி வந்ததுள்ளார். அத்துடன் கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் காப்பர் நிறுவனமும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் தொல்லை ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்

காரில் இருந்த கடிதத்தில், ''தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும், தகவல் அளித்தால் அவர்களே எங்களுடைய உடல்களை அடக்கம் செய்து விடுவார்கள்'' என்றும் அந்த கடிதத்தில் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள நமணசமுத்திரம் காவல்துறையினர், சேலம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர்? எதற்காக நகர சிவ மடம் அருகே காரை நிறுத்தினர்? உண்மையிலுமே அவர்களுக்கு கடன் பிரச்னை இருக்கிறதா? தற்கொலைதான் செய்துகொண்டனரா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.