Krishnagiri: கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் விபரீத முடிவுக்கு காரணம் என்ன.. போலீசார் தீவிர விசாரணை!
போலீசார் எம்.பி சுரேஷ் உடலை உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் வெங்கடேஸ்வரா ஜூவல்லரி என்ற பெயரில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகை கடையை தொழிலதிபர் எம்.பி. சுரேஷ் நடத்தி வந்தார். மேலும் நகைக்கடை மட்டுமல்லாது ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி பகுதியில் அனைத்து வணிகர் சங்க நகர தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் காந்தி நகரில் உள்ளஅவரது வீட்டில் இன்று காலை 7.15 மணி அளவில் வழக்கம்போல் இருந்தார். திடீரென தன் படுக்கை அறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் எம்.பி சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் சரக டி.எஸ்.பி மனோகரன் மற்றும் போலீசார் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் எம்.பி.சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
