Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!-yuvan shankar raja seeking rs 5 crore as compensation from landlady for the damages has caused jamila to his reputation - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yuvan Shankar Raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!

Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 18, 2024 04:53 PM IST

yuvan shankar raja: 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா?  ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!
Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!

யுவன் மீது பரபரப்பு புகார்

அந்த புகாரில், “ இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் எனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அவர் என்னுடைய சகோதரிக்கு 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருக்கிறார். இது குறித்து என்னுடைய சகோதரி கேட்கும் போதெல்லாம் யுவன் அதனை தர மறுத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து கேட்க, நான் அவரை போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்க வில்லை. இதற்கிடையே வீட்டில் இருந்து அவர் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அவர் பொருட்களை எடுத்து வீட்டை காலி செய்ய முயற்சித்து வருகிறார்.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி வாடகை மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்தப்புகார் குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் ஃபஸீலத்துல் ஜமீலா அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு நஷ்ட ஈடாக 5 கோடி தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறது. அறிக்கை பின்வருமாறு:- 

Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா?  ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!
Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.