தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode By Election : ஈ.வி.கே.எஸ் தொடர்ந்து முன்னிலை - 12 மணி நிலவரம் இதோ!

Erode By Election : ஈ.வி.கே.எஸ் தொடர்ந்து முன்னிலை - 12 மணி நிலவரம் இதோ!

Divya Sekar HT Tamil
Mar 02, 2023 11:58 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை

ட்ரெண்டிங் செய்திகள்

அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் மொத்தம் பதிவான 397 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 2ஆவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ள நிலையில் நாம் தமிழர், தேமுதிகவுக்கு ஒரு தபால் ஓட்டு கூட கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து மின்னனு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

12 மணி நிலவரம் இதோ

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் -39,855

தென்னரசு -13,515

நாம் தமிழர் -1,620

தேமுதிக -290

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்