தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode Bypolls:’அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்’- பாஜக Mla சரஸ்வதி காட்டம்!

Erode Bypolls:’அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்’- பாஜக MLA சரஸ்வதி காட்டம்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 27, 2023 12:29 PM IST

மாநில அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ சிகே சரஸ்வதி குற்றம் சாட்டி இருக்கிறார்

பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி
பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “ இந்த இடைத்தேர்தலில் ஏராளமான பணம் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும்.

இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலா போல, ஈரோடு கிழக்கு பார்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக் கொள்கின்றனர்; மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர். எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இக் குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால் தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அது உள்ளது அதனால் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து பல புகார்கள் கூறியும் அது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்” என்று அவர் பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்