தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erode By Election Booth Silip Distribution Work Started

Erode By Election : ஈரோடு இடைத்தேர்தல்.. தொடங்கியது பூத் சிலிப் விநியோகம்!

Divya Sekar HT Tamil
Feb 19, 2023 11:34 AM IST

Booth Silip Distribution : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது.

பூத் சிலிப் விநியோகம்
பூத் சிலிப் விநியோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையி 52 மையங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இடைதேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குசாவடிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் திமுக. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. 

100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு, வீடாகச்சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். வரும் 25-ம் தேதி வரை பூத் ஸ்லிப் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்