தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Employment Training : இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இணையதளம்

Employment Training : இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இணையதளம்

Priyadarshini R HT Tamil
Mar 24, 2023 05:44 PM IST

Employment internet : இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்கான வழிமுறைகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : இளைஞர்கள் சிறந்த முறையில் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி பெறுவதற்கு வசதியாக https://me-qr.com/HE7aqz64  என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து திறன் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், குறு நிறுவன மேம்பாட்டு திட்டம், வாழ்வாதார நிறுவனம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம், மகளிர் திட்டத்தின் மூலம் தீனதயாள் கிராமப்புற இளைஞர்களுக்கான 100 சதவீத வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், தேசிய பால் வள வாரியம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் குறுகிய கால திறன் பயிற்சி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தன்னார்வ பயிலும் வட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டங்கள் உள்பட பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. எனவே இந்த இணையதளத்தை வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

மேலே குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் கிளிக் செய்து உள்ளே சென்றால், பிரதமர் திறன் மேம்பாட்டுத்திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய கைவினைஞர் திட்டம், மகளிர் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திறன் மேம்பாடு திட்டம், மாவட்ட தொழில் மையம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், எம்எஸ்எம்இ திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள், அவற்றில் உள்ள வாய்ப்புகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வேலை தேடும் இளைஞர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அதில் பெற்று பயன்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

IPL_Entry_Point

டாபிக்ஸ்