தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Donkey Milk: கழுதை பால் விற்பனை ஜோர்.. ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

Donkey Milk: கழுதை பால் விற்பனை ஜோர்.. ஒரு லிட்டர் விலை எவ்வளவு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Apr 09, 2023 12:37 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு சங்கு கழுதைப்பால் ரூ 70க்கும், ஒரு லிட்டர் பால் ரூ.5000 க்கும் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவில்பட்டியில் கழுதை பால் விற்பனை அமோகம்.
கோவில்பட்டியில் கழுதை பால் விற்பனை அமோகம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கழுதை பால் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. கழுதை பாலில் மருத்துவக்குணம் இருப்பதாக கூறி பொது மக்கள் குழந்தைகளுக்கு ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். கோவில்பட்டியில் உள்ள ஜோதி நகர், சுப்பிரமணியபுரம், பாரதி நகர், ஸ்டாலின் காலனி உள்ளிட்ட பகுதிகளில் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த நடேசன் என்பவரது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 10 கழுதைகளை வைத்து கழுதை பால் விற்பனையை செய்து வருகின்றனர்.

கழுதைப்பாலை வாங்க பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், ஒரு சங்கு கழுதை பால் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் கழுதை பால் ரூபாய் 5000-க்கு விற்பனை செய்யபடுகிறது. இது தவிர சறும பிரச்னையை சரிசெய்வதாக கழுதையின் சிறுநீரையும், காய்ச்சலை குணப்படுத்துவதற்காக கழுதை முடியினால் செய்யப்பட்ட தாயத்தையும் ரூ. 70-க்கு விற்பனை செய்கின்றனர். இது தவிர கழுதையிடம் மூச்சு பிடிக்கவும் 70 ரூபாய் வசூல் செய்கின்றனர். கழுதைப்பால் மருத்துவ குணம் கொண்டது என்ற நம்பிக்கையால் அப்பகுதி மக்கள் குழந்தைகள் உடல் நலன் மேம்படும் என்று கூறி ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point