தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  குழப்பம் இருப்பவர்களுக்கு ஈரோட்டில் வெற்றி இல்லை! ஈபிஎஸை சீண்டி கனிமொழி பேட்டி

குழப்பம் இருப்பவர்களுக்கு ஈரோட்டில் வெற்றி இல்லை! ஈபிஎஸை சீண்டி கனிமொழி பேட்டி

Kathiravan V HT Tamil
Feb 16, 2023 01:52 PM IST

”ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி மிகப்பெரிய வெற்றியாகவும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடிய அத்தனை பேருக்குமான தோல்வியாகவும் இருக்கும்”

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மளிரணி தொண்டர்கள் உடன் கனிமொழி எம்.பி
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக மளிரணி தொண்டர்கள் உடன் கனிமொழி எம்.பி

ட்ரெண்டிங் செய்திகள்

புதிதாகக் தி.மு.கழகத்தில் இணைந்துள்ளவர்களை கனிமொழி எம்.பி வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

மாற்றுக் கட்சியினர் 200 பேர் திமுகவில் இணையும் நிகழ்வு
மாற்றுக் கட்சியினர் 200 பேர் திமுகவில் இணையும் நிகழ்வு

அப்போது பேசிய கனிமொழி, ஈரோடு கிழக்கில் வெற்றி வாய்ப்பு என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று ஆனால் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்பதுதான் முதலமைச்சர் இட்டுள்ள அன்பு கட்டளை; நிச்சயமாக இதுவும் நடக்கும் என்பது மக்களை பார்க்கும்போது தெரிகிறது.

தங்களுக்குள்ளேயே பல குழப்பங்கள் இருப்பவர்களுக்கோ, வடக்கிலே இருக்கும் மாற்று சக்திகளுக்கோ இடமளித்துவிட கூடாது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாடுபடும் திமுக ஆதரவை பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி மிகப்பெரிய வெற்றியாகவும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடிய அத்தனை பேருக்குமான தோல்வியாகவும் இருக்கும் என கனிமொழி தெரிவித்தார்.

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி, திமுக துணை பொது செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான க.பொன்முடி, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும்,உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சருமான சக்கரபாணி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கழக கூட்டணிக் கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாகஇன்று மாலை கனிமொழி கருணாநிதி எம்.பி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்