தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dig Vijayakumar: டிஐஜி விஜயகுமார் உடற்கூராய்வு நிறைவு; ஆளுநர் இரங்கல்

DIG Vijayakumar: டிஐஜி விஜயகுமார் உடற்கூராய்வு நிறைவு; ஆளுநர் இரங்கல்

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 07, 2023 12:28 PM IST

இந்நிலையில் இளம் புத்தி கூர்மை வாய்ந்த அதிகாரி விஜயகுமாரின் மரண செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

DIG விஜயகுமார்
DIG விஜயகுமார்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளர். பிரேத பரிசோதனை முடிந்து விஜயகுமாரின் உடல் வெளியே கொண்டு வரப்பட்ட நிலையில் அரசின் சார்பாக செய்தித்துறை அமைச்சர் பெ.சாமிநாதன் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அவர் அரசின் சார்பாக விஜயகுமார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு உடன் பணியாற்றிய காவல்துறையினர் தற்போது மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தேனி அணைக்கரை பட்டிக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட உள்ளது. குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இளம் புத்தி கூர்மை வாய்ந்த அதிகாரி விஜயகுமாரின் மரண செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.  

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை அவர் தனது முகாம் அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலை தமிழகம் முழுவதும் காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தனது உதவியாளரின் துப்பாக்கியை வாங்கி தன்னைத்தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடும் மன அழுத்தத்தில் இருந்ததால் அதற்காக மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த விஜயகுமார் உடலை காவல்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றனர்.

பிரேத பரிசோதனை கிடங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், பார்வையிட்டுள்ளார். வடக்கு ஆர்டிஓ கோவிந்தன் அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தினார். தற்போது டிஐஜி விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்