‘கிறிஸ்தவனாக பெருமைப் படுகிறேன்.. இது சங்கிகளை கோபப்படுத்தும்’ துணை முதல்வர் உதயநிதி பேச்சு!
‘அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர்’

நான் படித்த பள்ளி, கல்லூரி அனைத்துமே கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும், நான் ஒரு கிறிஸ்தவன் என கூறுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இது பல சங்கிகளை கோபப்படுத்தும் என்றும் பேசினார்.
கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் விழா மேடையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
நான் ஒரு கிறிஸ்தவன் தான்
‘‘உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். நான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படித்தது லயோலா கல்லூரி. நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன். இது பல சங்கிகளை கோபப்படுத்தும். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள். வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருகின்றனர்.
