தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mocha Cyclone: அதிதீவிர புயலாக மாறும் மோக்கா - மழைக்கு வாய்ப்பு

Mocha Cyclone: அதிதீவிர புயலாக மாறும் மோக்கா - மழைக்கு வாய்ப்பு

Suriyakumar Jayabalan HT Tamil
May 11, 2023 11:11 AM IST

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலை கொண்டு இருந்த மோக்கா புயல் அதிதீவிர புயலாக இன்று இரவு மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோக்கா
மோக்கா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புயலுக்கு ஏமன் நாடு மோக்கா எனப் பெயர் கொடுத்துள்ளது. போர்ட் பிளேயருக்கு மேற்கு தென்மேற்கு சுமார் 510 கிலோ மீட்டர், வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரின் தென் - தென்மேற்கே 1210 கிலோமீட்டர், மியான்மர் சிட்வேவுக்கு தென் - தென்மேற்கில் 1120 கிலோமீட்டர் மோக்கா புயல் நிலை கொண்டிருந்தது.

இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி படிப்படியாகத் தீவிரமடைந்து இன்று நள்ளிரவு தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு படிப்படியாக இந்த புயல் மீண்டும் நாளை காலை முதல் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடலில் நாளை மாலையில் அதிதீவிர புயலாக வலுவடைகிறது.

வரும் மே 13ம் தேதி அன்று மாலை இந்த புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு நீ 14ஆம் தேதி காலை முதல் சிறிது வலுவிழந்து தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை நோக்கி காக்ஸ் பஜார் மற்றும் கியாக்பியு இடையே அதிகபட்சமாக 120 முதல் 13 கிலோமீட்டர் இடையே 145 கிலோ மீட்டர் வேகத்தில் மே 14ஆம் தேதி முன் பகல் நேரத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் இடையே கடையைக் கடக்கும் பொழுது காற்றின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு மே 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

மேலும் மே 13 மற்றும் 15ஆம் தேதிகளில் ஒரே இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்போது வெப்ப அழுத்தம் சற்று அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்