MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 03:27 PM IST

நீட் ஒழிப்புப் போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம் இனியும் பொறுக்கலாகாது.

MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
MK Stalin: ’இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! நீட் ஏழைகளுக்கு எதிரானது!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

நீட் விவகாரம் தொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ட்வீட் செய்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்று வரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேலும் பல வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மானவர்களுக்கான வாய்ப்புகளுக்கு நீட் தடை போடுகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் மோசடிகள் 

தேசிய தேர்வு முகமை மேல் தவறில்லை என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசியிருந்தாலும் நடந்து வரும் நிகழ்வுகள் அதற்கு மாறான சித்திரத்தையே அளிக்கின்றன.

தேர்வுக் கண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு CAMR விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது. அதற்கு ஆதாரமாகப் பல கோடி ரூபாய்க்கான காசோலைகள் தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளனர் இந்தச் சதி செயலலில் பள்ளி முதல்வர் இயற்பியல் ஆசிரியர் பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு அமைப்புரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

நீட் ஒழிப்புப் போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம் இனியும் பொறுக்கலாகாது.

தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிப் பாதிக்கும் ஒரு மோசடி என்பது திரும்ப திரும்ப நிரூபணமாகிவிட்டது. மாணவர்களுக்கு எதிரான சமூகநீதிக்கு எதிரான ஏழைகளுக்கு எதிரான இந்த நீட் முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு

நீட் தேர்வு தொடர்பாக வெளியாகும் மோசடிகள் குறித்து காங்கிரஸ் கட்சியும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”தேசிய தேர்வு முகமையின் நேர்மையும், தேர்வு நடத்தப்படும் விதமும் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. NCRT கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து திறனையும் இழந்துவிட்டது” என குற்றம்சாட்டி உள்ளார். 

நீட் தேர்வு தொடர்பான பிரச்னைக்கு 'அதிக முன்னுரிமை' வழங்கப்பட வேண்டும் என்று கூறிய ஜெயராம் ரமேஷ், பாராளுமன்றத்தின் புதிய நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்ட உடனேயே, நீட் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை, NCRT   ஆகியவற்றை ஆழமான மறு ஆய்வு செய்ய வேண்டும் என கூறி உள்ளார். 

“நான் 2014 மற்றும் 2019 க்கு இடையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தேன், மேலும் நீட் தேர்வுக்கு பரந்த ஆதரவை வழங்கியதை நினைவு கூர்கிறேன். ஆனால், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள், நீட் தேர்வானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சலுகை அளிக்கும் என்றும், சிபிஎஸ்இ அல்லாத பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாதகமானதாக இருக்கும் என்றும் கவலை தெரிவித்திருந்தனர்,” என்று கூறிய ஜெய்ராம் ரமேஷ், "இந்த சிபிஎஸ்இ பிரச்சினைக்கு சரியான பகுப்பாய்வு தேவை என்று நான் இப்போது நினைக்கிறேன். NEET பாரபட்சமா? ஏழைப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களும் நீட் மீது ஆழ்ந்த சந்தேகங்களை வெளிப்படுத்தி உள்ளன என கூறி உள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.