'ஒரே நாடு, ஒரே பால்' கோஷம்! அமித்ஷாவை விளாசும் ஜெயராம் ரமேஷ்!
"அமித் ஷாவும் பாஜகவும் பல மாநில கூட்டுறவு சங்கங்களாக ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளின் கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்கு மாற்ற விரும்புகிறார்கள் - ஜெயராம் ரமேஷ்

“ஒரே நாடு, ஒரே பால்” என்ற பாஜகவின் முழக்கத்தை காங்கிரஸ் அனுமதிக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கர்நாடக அரசின் பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியை குஜராத்தின் அமுல் நிறுவனத்துடன் இணைக்க பாஜக திட்டமிடுவதாக காங்கிர்சஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இக்குற்றச்சாட்டுக்கு பாஜக மறுத்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மாநிலப்பட்டியலில் வருகிறது என அரசியமைப்பு கூறும் நிலையில் அதனை புறக்கணிக்கும் வேலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா முயல்வதாக குற்றம்சாட்டி உள்ளார். கூட்டுறவு சங்கங்களை மாநில பாடமாக தெளிவாக வரையறுக்கும் அரசியலமைப்பை பாஜகவும், கூட்டுறவு அமைச்சர் அமித் ஷாவும் புறக்கணிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.
