100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

Divya Sekar HT Tamil
Oct 01, 2024 12:51 PM IST

Deputy Chief Minister Udayanidhi : 3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்.. துணை முதல்வர் உதயநிதி பேச்சு!

ரூ.3.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

மேலும், 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.84 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரண தொகுப்பு, 255 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, 20 மாற்றுத்திறனாளி களுக்கு சுய தொழில் புரிய வங்கி கடன் மானியம் ஆவின் விற்பனை நிலையம் என ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,386 பயணிகளுக்கு ரூ.3.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

துணை முதல்வர் உதயநிதி தனித்துவமானவர்

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இணைந்து செங்கோல் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,”  துணை முதல்வர் உதயநிதி தனித்துவமானவர். குலோத்துங்க சோழன் போல தனித்தன்மை வாய்ந்தவர் உதயநிதி. அரசுக்கு துணை முதல்வராக இருந்தாலும் இந்த நாட்டிற்கே நீங்கள் துணையாக இருக்கிறீர்கள்” என புகழாரம் சூட்டி பேசினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

விருதுநகரில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இதுவரை 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்கள் என்றால் வீரத்திற்கும் வீர விளையாட்டிற்கும் தலைசிறந்தவர்களாக உள்ளார்கள்.

பட்டிதொட்டி எங்கும் விளையாட்டு வீரர்களை உருவாகும் நோக்கில் இந்த ஆண்டு முதல்வர் கோப்பை போட்டிகளில் 37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ஒரு மடங்கு அதிகரித்து 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

3 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு கோரப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

13 துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதை நான் சொல்லவில்லை ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதிக வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. யாராலும் வீழ்த்த முடியாத அரசியல் வீரராக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.