Udhayanidhi Stalin : ‘எதை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுவார் உதயநிதி’ இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!-senior congress leader evks ilangovan interviewed on udhayanidhi stalin taking over as deputy chief minister of tn - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin : ‘எதை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுவார் உதயநிதி’ இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

Udhayanidhi Stalin : ‘எதை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுவார் உதயநிதி’ இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

HT Tamil HT Tamil
Sep 29, 2024 12:33 PM IST

EVKS Ilangovan : ‘உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின் போது இந்திய அளவில் எதிர்ப்புகள் வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்’

Udhayanidhi Stalin : ‘எதை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுவார் உதயநிதி’ இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
Udhayanidhi Stalin : ‘எதை கொடுத்தாலும் சிறப்பாக பணியாற்றுவார் உதயநிதி’ இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!

சிறப்பாக பணியாற்றுபவர் உதயநிதி

‘‘துணை முதல்வராக பதவியேற்க இருக்கின்ற உதயநிதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த பொறுப்பை கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சராக ஒருவருட காலத்தில் சிறப்பாக பணி செய்துள்ளார். உலக அளவில் நடைபெறக்கூடிய கார் ரேஸ் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர். துணை முதல்வராக அவர் பதவியேற்றால் சிறப்பாக பணியாற்றுவார். உதயநிதி ஸ்டாலின் அவரது தந்தை மு.க.ஸ்டாலின் உறுதியும், அவரது தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் அவருக்கும் உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின் போது இந்திய அளவில் எதிர்ப்புகள் வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்,’’ என்று கூறினார்.

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, பதிலளித்த இளங்கோவன்,

அடக்கி விட நினைக்கும் மத்திய அரசு

‘‘விமர்சனங்கள் இரண்டு புறமும் இருக்கலாம். 471 நாட்கள் சிறையில் ஜாமீன் கூட கொடுக்காமல் மத்திய அரசு பழிவாங்கும் செயலை செய்தது. உடல்நிலை சரியில்லை இதய நோய் பிரச்சனை உள்ள செந்தில் பாலாஜியை மத்திய அரசு வஞ்சித்தது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் சிறையில் வைத்தார்கள். இதுபோன்ற எதிர்க்கட்சியில் தலைவர்களை சிறையில் வைத்தால் அடங்கி விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது.

இந்திய மக்கள் ஒரு மனதாக மோடியை தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த எண்ணம் மோடி அவர்களுக்கு புரிந்த காரணத்தினால் மோடியின் முகத்தில் உற்சாகம் கொஞ்சம் கூட இல்லை. செத்த கலை என்று சொல்வார்கள் அதுதான் அவரது முகத்தில் தெரிகிறது. வெளிநாடு செல்லும் போது மட்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறார் மோடி,’’ என்று கூறினார்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசிய திருமாவளவன் கருத்து பற்றி கேள்விக்கு,

கூட்டணி ஆட்சி சாத்தியமா?

‘‘அவரவர்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அனைத்து கட்சியினரின் விருப்பம் தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்து கட்சிகளும் சொல்லி இருக்கிறார்கள். முதல்வர் மு க ஸ்டாலின் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கூட்டணி முன்பு விட மிகவும் வலுவாக பலமாக இருக்கிறது. திமுக பவள விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து உள்ளார்கள். இந்தக் கூட்டணி எண்ணிக்கைக்காக இல்லாமல் கொள்கைக்காக சேர்ந்தவர்கள். இந்தக் கூட்டணி ஒன்றுபட்டு தான் இருக்கும்,’’ என்று கூறினார்.

தமிழக காங்கிரஸ் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த இவிகேஎஸ் இளங்கோவன்,

‘‘செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தீவிர படுத்த வேண்டும்,’’ என்று கூறினார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.