ஒரு செங்கல்.. 7 ஆயிரம் கி.மீ பயணம்.. 40க்கு 40 வெற்றி.. மகுடம்மாக துணை முதல்வர் பதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே புகழாரம்!-minister mrk panneerselvam about deputy chief minister udayanidhi stalin - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஒரு செங்கல்.. 7 ஆயிரம் கி.மீ பயணம்.. 40க்கு 40 வெற்றி.. மகுடம்மாக துணை முதல்வர் பதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே புகழாரம்!

ஒரு செங்கல்.. 7 ஆயிரம் கி.மீ பயணம்.. 40க்கு 40 வெற்றி.. மகுடம்மாக துணை முதல்வர் பதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே புகழாரம்!

Divya Sekar HT Tamil
Oct 01, 2024 10:13 AM IST

MRK Panneerselvam : ஒரு செங்கலை வைத்து அவர் சட்டமன்றத் தேர்தலை வெற்றி பெறச் செய்தார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலின் போது 7000 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ததில் 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெறச் செய்தார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒரு செங்கல்.. 7 ஆயிரம் கி.மீ பயணம்.. 40க்கு 40 வெற்றி.. மகுடம்மாக துணை முதல்வர் பதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே புகழாரம்!
ஒரு செங்கல்.. 7 ஆயிரம் கி.மீ பயணம்.. 40க்கு 40 வெற்றி.. மகுடம்மாக துணை முதல்வர் பதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே புகழாரம்!

கடலூர் மாநகராட்சியில் தூய்மையே சேவை விழிப்பணர்வு பிரசாரம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய சிற்பம் விழிப்புணர்வுக்காக கடலூர் மாநகராட்சி சார்பில் சில்வர் அமைக்கப்பட்டுள்ளது.

பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சி

அதற்காக 10 அடி உயரத்தில் சுமார் 5000 எண்ணிக்கை பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவான மாதிரி சிற்பம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மகுடம்மாக துணை முதலமைச்சர் பதவி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,” உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு இன்று கிராமமந்தோறும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உருவாகி உள்ளனர்

ஒரு செங்கலை வைத்து அவர் சட்டமன்றத் தேர்தலை வெற்றி பெறச் செய்தார். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலின் போது 7000 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ததில் 40க்கு 40 நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெறச் செய்தார் அதற்கு மகுடம்மாக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஆக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறையை ஒதுக்கவும், துணை முதலமைச்சர் ஆக அறிவிக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து உள்ளார்.

ஆளுநர் ஒப்புதல்

மேலும் அமைச்சரவையில் வி.செந்தில்பாலாஜி, டாக்டர் கோவி. செழியன், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை சேர்க்கவும் முதலமைச்சர் அளித்தை பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கே.ராமச்சந்திரன் ஆகியோரின் பொறுப்பகளை திரும்ப பெறவும் முதலமைச்சர் பரிந்துரை செய்த நிலையில் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பு தெரிவித்து உள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.