தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chennai: Use Whatsapp Prohibition For Teachers!

Chennai: தேர்வு எழுதும் மாணவர்கள்! வாட்ஸ் அப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 15, 2023 12:23 PM IST

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைத் தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடாது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதும் நிலையில் தேர்வு பணியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த தேர்வு துறை தடை விதித்துள்ளது தமிழகத்தில் வரும் மார்ச் 13ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது அதேபோல் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 6 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் மாநிலம் முழுவதும்

சுமார் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுத்தேர்வுக்கான தயாரிப்புகளில் தற்போது மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வுக்கான விதிகள் குறித்து பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் ஆசிரியர்களின் செல்போனை வைத்துவிட வேண்டும். தேர்வு அறைக்குள் எடுத்துச் சொல்லக்கூடாது. மேலும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைத் தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக வாட்ஸ் அப் பயன்படுத்துவதோ அதன் வழியாக தகவல்களை பரிமாறுவதும் குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தேர்வு எழுதினாலும் ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப்பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்