தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops : ஓபிஎஸ் விடுதலை.. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம்.. உயர்நீதிமன்றம் கண்டனம்!

OPS : ஓபிஎஸ் விடுதலை.. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம்.. உயர்நீதிமன்றம் கண்டனம்!

Divya Sekar HT Tamil
Aug 31, 2023 11:45 AM IST

சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் வழக்கு
ஓ.பன்னீர்செல்வம் வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 2012ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கப்போவதாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன் வந்து மேல்முறையீடு செய்து விசாரணைக்கு எடுத்த நிலையில் தற்போது நான்காவதாக அதிமுகவில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம். அதிகார வரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு வழக்கை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. 

எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளன. ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி பச்சோந்தியாக மாறிவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை இதேபோல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point